Saturday, February 24, 2018

.
Breaking News

இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட பர்கான் வானி படத்துக்கு நவாஸ்ஷெரீப் அஞ்சலி!

இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட பர்கான் வானி படத்துக்கு நவாஸ்ஷெரீப் அஞ்சலி!
காஷ்மீரில் இந்திய ராணுவத்துடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் தளபதி பர்கான் வானி கடந்த ஆண்டு  ஜூலை 8 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது ஓர் ஆண்டு நினைவு நாளையொட்டி இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அவரது படத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் ‘காஷ்மீர் மக்களின் குரலை இந்தியா தனது பலத்தால் முடக்குகிறது. காஷ்மீர் மக்கள் தங்களது எண்ணத்துக்கு முடிவு எடுக்க தகுதி உடையவர்கள். பர்கான்வானி சிந்திய ரத்தம் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்து வரும் சுதந்திரபோராட்டத்துக்கு ஒரு உத்வேகத்தை அளித்து உள்ளது’ என்று கூறி உள்ளார். அதேபோல், பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவும் பர்ஹான் வானி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *