Saturday, November 18, 2017

.
Breaking News

ஸ்பெல்லிங் பீ போட்டியில் சாம்பியன் பட்டத்துடன் 50,000 டாலர்:

ஸ்பெல்லிங் பீ போட்டியில் சாம்பியன் பட்டத்துடன் 50,000 டாலர்:

‘ஸ்பெல்லிங் பீ’ எனப்படும் மிக அதிகமான ஆங்கில எழுத்துக்களை கொண்ட சொற்றொடரை வாசிக்கும் போட்டியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த தமிழ் தம்பதியரின் மகனான அனிருத் கதிர்வேல்(9) என்ற சிறுவன் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன் 50 ஆயிரம் டாலர்களையும் பரிசாக பெற்றுள்ளான்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிருத்தின் பெற்றோரான பிரிதிவி ராஜ்- சுஜாதா தம்பதியர் 16 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் குடியேறி, மெல்போர்ன் நகரில் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு பள்ளியில் படித்துவரும் அனிருத் முதல் வகுப்பு மாணவனாக இருந்த வேளையில் இருந்தே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்துள்ளான்.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உள்நாட்டு மாணவர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி சாம்பியன் பட்டத்தை அனிருத் வென்றுள்ளான். மேலும், அவனது கல்விக்கான உதவித்தொகையாக 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களும், அவனது பள்ளிக்கு தேவையான சுமார் 10 ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள உபகரணங்களும் அவனுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

About The Author

Related posts