Thursday, December 14, 2017

.
Breaking News

வட கொரியாவிற்கு எதிராக புதிய தீர்மானங்கள் -அமெரிக்கா

வட கொரியாவிற்கு எதிராக புதிய தீர்மானங்கள் -அமெரிக்கா

வட கொரியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என அமெரிக்க உயர்ஸ்தானிகர் நிக்கி ஹாலி தெரிவித்துள்ளார்.

நீண்டதூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையொன்றை வடகொரியா நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) வெற்றிகரமாக சோதித்திருந்த நிலையில், அதன் எதிரொலியாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தடையை மீறி வடகொரியா இவ்வாறு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுவரும் பட்சத்தில், தேவை ஏற்படின் வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்காவின் கணிசமான இராணுவ படை ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமது நாட்டையும், நட்பு நாடுகளையும் பாதுகாக்க தமது திறன்களை முழு அளவில் பயன்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

வட கொரியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என அமெரிக்க உயர்ஸ்தானிகர் நிக்கி ஹாலி தெரிவித்துள்ளார். நீண்டதூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையொன்றை வடகொரியா நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) வெற்றிகரமாக சோதித்திருந்த நிலையில், அதன் எதிரொலியாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தடையை மீறி வடகொரியா இவ்வாறு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுவரும் பட்சத்தில், தேவை ஏற்படின் வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்காவின் கணிசமான இராணுவ படை ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமது நாட்டையும், நட்பு நாடுகளையும் பாதுகாக்க தமது திறன்களை முழு அளவில் பயன்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *