Monday, October 23, 2017

.
Breaking News

டிரம்ப்பை ‘வறுத்தெடுக்கும்’ கேலிச் சித்திரப் போட்டி நடத்தியது ஈரான்!

டிரம்ப்பை ‘வறுத்தெடுக்கும்’ கேலிச் சித்திரப் போட்டி நடத்தியது ஈரான்!

அதிபர் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக ஈரான் உள்ளிட்ட 6 இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்குப் பயணக் கட்டுப்பாட்டை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கிண்டலடிக்கும் நோக்கில் அனைத்துலக அளவில் டிரம்ப் பற்றிய கேலிச் சித்திரப் போட்டியை ஈரான் நடத்தியது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக  உறவுகள் கசந்து போயிருக்கும் நிலையில் நடத்தப்பட்ட இந்தக் ‘கார்ட்டூன்’ போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் ஈரானைச் சேர்ந்த ஹாடி அசாடி என்ற இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். இந்தப் போட்டிக்கு ‘டிரம்ப்பிஸம்’ எனப் பெயர் வைத்தனர் அதன் ஏற்பாட்டாளர்கள்.

ஹிட்லரின் நாஜிகளை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்ட இந்தத் தலைப்பைப் பயன்படுத்தி, பல கேலிச் சித்திர ஓவியர்கள் டிரம்பை நாஜிக்களுடன் ஒப்பிட்டு சித்திரங்களைத் தீட்டினர்.

இந்தச் சித்திரங்கள் தற்போது தெஹ்ரானில் ஓர் ஓவியக் கண்காட்சிக் கூடத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

டாலர் நோட்டுக்களால் தயாரிக்கப்பட்ட ஓர் உடையை அணிந்து கொண்டு, தம்முடைய மஞ்சள் நிறத் தலைமுடியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது போன்ற டிரம்ப் பற்றிய கேலிச் சித்திரமே முதல் பரிசைப் பெற்றது. இந்தப் போட்டியில் பல அமெரிக்க கேலிச் சித்திர ஓவியர்களும் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *