Tuesday, October 24, 2017

.
Breaking News

மானபங்கத்திற்கு உள்ளாகும் ‘ஷெல்’ நிறுவன மாடல் அழகியின் விளம்பர உருவப் படம்!

மானபங்கத்திற்கு உள்ளாகும் ‘ஷெல்’ நிறுவன மாடல் அழகியின் விளம்பர உருவப் படம்!

ஷெல் பெட்ரொல் நிலையத்தின் பெரும்பாலான விளம்பரங்களில் மாடலாக இருந்து வரும்  ‘ஷாக்’ (Shocked) புகழ் நூர் கய்ருசாலே என்ற 25 வயதுடைய பெண்ணின் உருவப்படம் அண்மையில் மானபங்கச் செயலுக்கு  உள்ளாக்கப்பட்டதானது சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணை பெரும் மனச்சங்கடத்திற்கு ஆளாக்கி இருப்பதாக கூறப்பட்டது.

விளம்பரச் சுவரொட்டியில் உள்ள நூர் கய்ருசாலயின் உருவப்படத்தை ஆண் வாடிக்கையாளர்கள், முத்தமிட்டாலோ அல்லது கட்டி   அணைத்தாலோ கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பாலியல் துன்புறுத்தல்கள் என்கிற அளவுக்கு எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது மிகவும் கொடுமை என அந்தப் பெட்ரோல் நிலையத்தின் மேற்பார்வையாளர் நோர் சபிலா.

ஆண் வாடிக்கையாளர்கள் அந்த பெண்ணின் உருவப்படத்தின் கையைப் பிடிப்பது, கன்னத்தில் முத்தமிடுவது மற்றும் மார்பைப் பற்றுவது போன்ற சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் வைரலாக்கும் நோக்கில் செய்யப்பட்ட இந்த செயலுக்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. ஆனால், இதற்குப் பிறகு வேறு யாரவது தவறான நோக்கில் இது போன்ற செயல்களை மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படுமென என நோர் சபிலா எச்சரித்தார

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *