Thursday, June 22, 2017

.

அசாம் வெள்ளத்தால் 1,800 கிராமங்கள் பாதிப்பு!

அசாம் வெள்ளத்தால் 1,800 கிராமங்கள் பாதிப்பு!

அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத பலத்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 80 சதவீதம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மொத்தம் உள்ள 27 மாவட்டங்களில் 20 மாவட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.images (45)

தேம்ஜி, கோபால்பாரா உள்பட 20 மாவட்டங்களில் உள்ள 1,800 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 லட்சம் மக்கள் வெள்ளம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.images (46)

1.1 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர்.

வெள்ளத்தால் துபாலி மாவட்டம்தான் அதிகம் சேதமடைந்துள்ளது. இங்கு மட்டும் 4½ லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மொரிகான் மாவட்டத்தில் 2.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

About The Author

Related posts