Saturday, February 24, 2018

.
Breaking News

இந்தியா -சீனா எல்லைபகுதியில் பதற்றம்!

இந்தியா -சீனா எல்லைபகுதியில் பதற்றம்!
சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, நேபாள எல்லைகளின் மூச்சந்திப்பில் டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் எனக் கூறி அங்கு சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு இந்தியா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை  ஏற்படுத்தியுள்ளது. எனவே ராணுவத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தி வருகிறது.
காங்டாக்கின் 17 மலைப்பிரிவு தலைமையகம் மற்றும் கால்போங்கில் 27 மலைப் பிரிவு ராணுவ தலைமையகத்தை பார்வையிட்டு இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத்  ஆய்வு நடத்தி வருகிறார்.
எல்லைபகுதியில் சீனாவும் இந்தியாவும் 3000 ராணுவ துருப்புகளை நிருத்தி உள்ளன. ராணூவ தளபதி இன்று மாலை புது டெல்லி திரும்புகிறார். இதை தொடர்ந்து “33 கார்ப்ஸ் மற்றும் 17 பிரிவு தளபதிகள் உள்பட அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *