Tuesday, November 21, 2017

.
Breaking News

கத்தார் மீது புதிய தடைகள்: சவுதி அரேபியா எச்சரிக்கை

கத்தார் மீது புதிய தடைகள்: சவுதி அரேபியா எச்சரிக்கை

கத்தார் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் அண்மையில் துண்டித்தன.

கத்தாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படைத் தளம் உள்ளது. எனவே சவுதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த அமெரிக்கா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருதரப்பு மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை சுமூக முடிவு எட்டப்படவில்லை.

ஏற்கெனவே கத்தாருடனான சாலை, கடல், வான் வழிப் போக்கு வரத்தை சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் முற்றிலு மாக தடை செய்துள்ளன. சில பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுக்கான சவுதி அரேபிய தூதர் ஒமர் கூறியபோது, கத்தாருக்கு 13 நிபந்தனைகளை விதித்துள்ளோம், அவற்றை ஒருவாரத்துக்குள் அந்த நாடு நிறைவேற்ற தவறினால் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது கூறிய தாவது:

சவுதி அரேபியாவின் நிபந் தனைகள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. சமரச பேச்சுவார்த்தைக்கு அந்த நாடு தயாராக இல்லை. அதற்கு முன்பாகவே நிபந்தனைகளை விதிக்கிறது. இது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது.

தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக எங்கள் மீது சுமத் தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *