Thursday, December 14, 2017

.
Breaking News

அமைச்சர்களுக்கு எதிராக நிதிக்குற்றப்பிரிவில் முறையிடுவேன்-சி.வி.விக்கினேஸ்வரன்

அமைச்சர்களுக்கு எதிராக நிதிக்குற்றப்பிரிவில் முறையிடுவேன்-சி.வி.விக்கினேஸ்வரன்

தான் நியமிக்கும் விசாரணைக் குழு முன்பாக, அமைச்சர்கள் சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் சாட்சியமளிக்க முன்வராவிட்டாலும் விசாரணை நடைபெறும் என்றும், தேவைப்பட்டால் குறித்த அமைச்சர்களுக்கு எதிராக நிதிக்குற்றப்பிரிவில் முறையிடுவேன் என்றும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்ததாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு சட்டபூர்வமாற்ற குழு என்றும் எனவே தாங்கள் முதலமைச்சர் நியமிக்கும் விசாரணைக் குழுமுன் சாட்சியமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவுக்குழு அமைத்தால் மட்டுமே செல்வோம் எனவும் இரு அமைச்சர்களும் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறித்து முதலமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை முதலமைச்சருக்கு ஆதரவான மாகாணசபை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். அதன்போது தான் குறித்த விடயத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதன்போது குறிப்பிட்ட முதலமைச்சர். அவர்கள் வராவிட்டாலும் அவர்களுக்கு எதிரான விசாரணை நடைபெறும். சாட்சியங்கள் பதிவுசெய்யப்படும். அதற்கு ஏற்றவாறு நான் நடவடிக்கை எடுப்பேன். அதைமீறி தேவை ஏற்பட்டால் அவர்களுக்கு எதிராக நிதிக்குற்றப்பிரிவினரிடம் முறையிடுவேன் என்றார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *