Tuesday, November 21, 2017

.
Breaking News

விளையாடிய மகிழ்ந்த மரத்தை காப்பாற்ற, பணம் திரட்டிய சிறுவர்கள்!

விளையாடிய மகிழ்ந்த மரத்தை காப்பாற்ற, பணம் திரட்டிய சிறுவர்கள்!

குடியிருப்பு வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று வெட்டப்படுவதை தடுக்க, இரண்டு சிறுவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு சமுக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பெங்களுரூவில் வடிகால் திட்டப் பணிக்காக பழமை வாய்ந்த மரம் ஒன்றை வெட்ட அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், இதற்கு 9 வயதான பாரத் மற்றும் 7 வயதான அர்ஜூன் ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், “நாங்கள் அந்த மரத்தை சுற்றி விளையாடி இருக்கிறோம். பறவைகளை நாங்கள் அந்த மரத்தில்தான் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். கலையில் குயில்களின் சத்தத்தை அங்கிருந்துதான் கேட்டு இருக்கிறோம். அங்கு அணில்கள் விளையாடுவதை பார்த்து இருக்கிறோம்” என இருவரும் கூறினர்.

மேலும், இந்த மரத்தை வெட்டக் கூடாது என்று மரத்தைக் காப்பற்றுவதற்காக மரத்தைக் கட்டிப்பிடித்த படி போராட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால் மரத்தை காப்பாற்ற வேண்டுமானால் மாற்று வழியமைக்க 50 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக தேவைப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால், சிறுவர்கள் இருவரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பணம் திரட்டி 7 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர். சிறுவர்களின் இந்த ஆர்வத்தை கண்டு வியந்த குடியிருப்புவாசிகள், மரத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லாதவாறு வடிகால் திட்டத்தை செயல்படுத்த முன்வந்தனர்.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் சிறுவர்களின் செயல்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *