Wednesday, November 22, 2017

.
Breaking News

கிரகப் போர்8 …} காசியரின் பேரன்.

கிரகப் போர்8 …} காசியரின் பேரன்.

வேற்றுக் கிரகத்தில் சாமியும் சுந்தரியும் (கிரகப்போர் 8)

யானை முகத்;தைக் கொண்ட மனிதர்களுடன் அந்தப் பெரிய மண்டபத்திலிருந்து கொண்ட அங்கிருந்த பெரிய திரையில் கனடாவிற்குப் போய்க் கொண்டிருக்கும் பிரித்தானியாவின் பிரிட்டிஸ் எயர்வேர்ஸ் விமானத்தில் சுந்தரியின் மாமன் முiறானவர் பயணித்துக் கொண்டிருப்பதை சுந்தரி பார்த்ததும்”மாமா” என தன்னையறியாமல் கத்துகிறாள்.

சாமியும் சுந்தரியும் இருக்கும் கிரகத்திலிருந்து பலவாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருக்கும் பூமியின் மேற்பரப்பில் கனடாவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அந்த விமானத்தை திரையில் பார்த்தும் அவர்கள் வியப்பின் உச்சகிக்கே சென்று விடுகிறார்கள்.

சுந்தரியின் மாமனார் பிரித்தானியாவில் கிரகங்கள் பற்றி ஆய்வு செய்யும் பேராசிரியர். அவர் தனது கையிருக்கும் ஐ பாட்டைப் பார்த்தக் கொண்டிருக்கும் போதுதான் சுந்தரி மாமா என்று வியப்புடன் கத்த, அவளின் குரலை தனக்கருகில் கேட்பது போல கேட்கவே அவர் திரும்புகிறார்.அதே நேரம் அவர் ஐ பாட்டில் யானை முகம் கொண்ட மனிதர்களுடன் தனது மருமகள் முறையான சுந்தரியும் இருப்பதைக் கண்டதும் அவரும் திகைக்கிறார்.

அவர்களிருவரைச் சுற்றியும் யானை முகத்தோடு மனிதர்களுக்கு இருக்கும் கைகால்களோடு இருக்கும் அந்தக் காட்சி அவரின் ஐ பாட்டில் தெளிவாகத் தெரிகின்றது. பக்தில் இருக்கும் பயணியும் இதைப் பார்த்துத் திகைக்கிறார். சுந்தரியின் மாமன் ஐபாட்: பார்ப்பதையும் அதில் தங்கள் உருவம் தெரிவதையும் சக பயணியும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் பெரிய திரையில் சாமியும் சுந்தரியும் அவர்களுடன் யானை முகம் கொண்ட மனிதர்களும் பார்க்கிறார்கள்.

விமானத்தின் உள்பகுதி முழுவதும் தெளிவாகத் தெரிகின்றது.விமானப் பணிப் பெண்கள் தேநீர் உணவு கொடுத்துக் கொண்டு வருவதும் தெரிகின்றது.

சில நிமிடங்களில் அந்தக் காட்சி மறைகின்றது. மண்டபத்தில் இருந்த யானை முகம் கொண்ட இருவரைத் தவிர அனைவரும் போய்விடுகின்றனர். மண்டபத்தை விட்டு அவர்கள் சாமிiயும் சுந்தரியையும் வெளியே மாடம் போன்ற இடத்திற்கு அழைத்து வருகின்றனர்.

இந்தக் கிரகத்திற்கு வந்த போது வீடுகள் எல்லாம் இளஞ்சிவப்பில் மாதுளம்பழ நிறத்திலிருந்தன இப்பொழுது வெளிர்நீல நிறத்திலிருந்தன. சாமியும் சுந்தரியும் அந்த அதிசயத்தைப் பார்க்கிறார்கள்.

பூமியைவிட்டு சாமியும் சுந்தரியும் வேற்றுக் கிரகங்களுக்கு வந்தவுடன் அந்தந்த கிரகங்களில் வாழும் மனிதர்கள் பேசும் மொழியை அவர்களால் பேச முடிகின்றது. இது அந்தந்த கிரகங்களில் உள்ளவர்களால் இவர்கள் இருவரின் உடல்களிலும் காந்த அலைகளால் அந்தந்த மொழிகளின் அடிப்படைக் கூறுகள் அவரவரின் மூளைகளின் நினைவறைகளில் பதியப்படுகின்றன. அதனால் மாங்கதிர் கிரக

வாசிகளின் மொழியையும் இப்பொழுது தங்கி நிற்கும் யானைமுக கிரக வாசிகளின் மொழியை அவர்களால் விளங்கிக் கொள்ளவும் பேசவும் முடிந்தது

தாங்கள் நிற்கும் கிரகத்தின் நிறம் மாறியதற்குக் காரணம் மேலே நட்சத்திரங்கள் போல தெரிகின்ற நீலநிறமான ஐந்து கிரகங்களே அவற்றின் வெளிச்சம் இங்கே விழுகின்றன என யானை முகம் கொண்டவர்கள் விளக்கினார்கள். இப்பொழுது அந்த ஐந்து கிரகங்களிலும் இரவு நேரம் இங்கும் இரவு நேரம் என்றவர்கள் உங்களை மாங்கதிர் கிரகத்திலிருந்து இக்கிரகத்திற்க அழைத்து வந்த போது இங்கும் பகல் அந்த ஐந்து கிரகங்களிலும் பகல் என்றனர். பகலில் இந்தக் கிரகமும் அந்த ஐந்து கிரகங்களும் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரியும் என்றவர்கள், பூமிக்கு வெளிச்சம் கொடுக்க சூரியன் சந்திரன் போன்று இந்த ஆறுகிரகங்களுக்கும் தனி ஒரு சூரியன் இல்லை ஒவ்வொரு கிரகமும் இன்னொரு கிரகத்திற்கு வெளிச்சம் கொடுக்கின்றன.இப்பொழது நாங்கள் இரவு உணவு சாப்பிடுவதற்காக அங்கே தெரிகின்ற கிரகங்களில் ஒரு கிரகத்திற்குத்தான் போகப் போகிறோம், ஆனால் நாங்கள் வழமையாக அங்கு போய்ச் சாப்பிடுவது இல்லை, நீங்கள் எங்கள் விருந்தினர்கள் உங்களை அழைத்துப் போகப் போகிறோம் என்று சொல்லியவர்கள் தங்கள் கைகளில் பொருத்தப்பட்ட ஒரு கருவியை அமத்த அங்கிருந்து சிவப்பு நிற கதிர் ஒரு கிரகத்தைப் போய்த் தொட்டது. தொட்ட கிரகத்தைக் காட்டி அங்குதான் போகப் பேரிறோம் என்றார்கள்.

மண்டப மாடத்தை விட்டு வெளியே அவர்களிருவரையும் அழைத்து வந்தவர்கள் முட்டை வடிவிலான வாகனத்திற்குள் அழைத்துச் சென்று இருக்க வைத்தார்கள்.

அவர்களின் இருக்கைகள் அவர்களிருவரையும் அணைத்தக் கொண்டிருந்தன. யானை முகம் கொண்ட மனிதர்கள் அதனை இயக்கினார்கள்.

அந்த வாகனம் அங்கிருந்து கிளம்பியதற்கான எந்த அசைவையும் சாமியாலும் சுந்தரியாலும் உணர முடியவில்லை.அசைவதை அவர்களால் உணர முடியாவிட்டாலும் அவர்கள் தாங்கள் பிரயாணம் செய்து கொண்டிருப்பதை உணரந்தார்கள்.

பூமியில் இரவில் பிரயாணம் செய்யும் போது தெரியும் தெருவிளக்கு வெளிச்சம் போல இந்த வாகனத்தின் வெளிப்புறத்திலிருந்து வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது.

சில நிமிட பிரயாணத்தின் பின் மெதுவாக அந்த வாகனம் ஒரு விடுதி போல இருந்த கட்டிடத்தின் முன் இறங்கியது. கட்டிடம் நீலநிறக் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. சாமியும் சுந்தரியும் பிரயாணம் செய்த வாகனத்தின் கதவு திறந்ததும் அவர்களை அழைத்துப் போக வந்தவர்களைப் பார்த்து அவர்களிருவரும் திகைத்தனர். அவர்களுக்கு இன்னும் அதிசயங்கள்; காத்திருந்தன.

(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *