Thursday, December 14, 2017

.
Breaking News

இந்தியா-பங்களாதேஷ் எல்லை வழியே இளம்பெண்கள் கடத்தல்

இந்தியா-பங்களாதேஷ் எல்லை வழியே இளம்பெண்கள் கடத்தல்

மேற்கு வங்காள மாநிலத்தினைத் தொட்டுச் செல்லும் இந்தியா-பங்களாதேஷ் எல்லை வழியே பெருமளவிலான குழந்தைகளும் இளம்பெண்களும் கடத்தப்பட்டு வருகின்றனர். பங்களாதேஷில் நிலவும் வறுமைச்சூழல் காரணமாக ஆண்டுதோறும் ஆயிரகணக்கானோரை ஆட்கடத்தல்காரர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வருகின்றனர். வேலை வாங்கித்தரும் உத்தரவாதத்தின் பெயரால் அழைத்துவரப்படும் இம்மக்கள், பாலியல் மற்றும் வீட்டு சேவகத்திற்காக விற்கப்படும் அவலம் அரங்கேறி வருகிறது.

ஆட்கடத்தலுக்கு பெயர் போன பங்களாதேஷ், நேபால் என்ற இரு வறுமைமிகுந்த நாடுகளுடன் மேற்கு வங்காள மாநிலம் சிக்கலான எல்லைப் பகுதியைக் கொண்டிருக்கின்றது. எல்லைப் கோபுரங்கள், கிராமங்களினூடாக கடக்கும் நெளிவுச்சுளிவான பாதைகள், விவசாய நிலங்கள், ஆறுகள் என அந்த எல்லை சுமார் 2000 கி.மீ.) நீண்டிருக்கிறது. இப்படியான நிலவமைப்பும் ஆட்கடத்தலுக்கு துணைப்புரிவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எல்லையோர பகுதிகளில் நிலங்களையும் வீடுகளையும் சொந்தமாக வாங்கும் ஆட்கடத்தல்காரர்கள் வாக்காளர் பட்டியலிலும் தங்கள் பெயர்களை இணைத்துக்கொள்வதாக ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற தொண்டு அமைப்பு ராய்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

உதாரணத்திற்கு, பங்களாதேஷைச் சேர்ந்த ஓர் ஆட்கடத்தல்காரர் ரேசன் அட்டை உட்பட அத்தனை இந்திய அடையாளச் சான்றுகளையும் கொண்டிருக்கிறார். எல்லையோரப் பகுதிகளில் நிலத்தை வாங்கி வீடுக்கட்டி, பங்களாதேஷிலிருந்து கடத்தப்படும் பெண்களுக்கான தற்காலிக வசிப்பிடமாக அதை வைத்துள்ளார். அவரால் கடத்தப்பட்ட 35 பெண்கள் தற்போது மும்பையில் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

2016 உலக அடிமைத்தன குறியீட்டின் படி, அடிமைநிலையில் வைக்கப்பட்டுள்ள 46 மில்லியன் பேரில் 40 சதவீதமானோர் இந்தியாவில்  உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *