Friday, February 23, 2018

.
Breaking News

கிரகப் போர் 4 … } காசியரின் பேரன்.

கிரகப் போர் 4 … } காசியரின் பேரன்.
பரமசாமியும் சுந்தரியம் நண்பரின் வீட்டிற்குள் நுழைந்த போது வீட்டின் நிலவரம் களேபரமாக இருந்தது.கதவு திறநதிருந்ததால் அவர்கள் இருவரும் சுலபமாக நண்பரின் நுழைய முடிந்தது. அங்கு நடைபெற்று முடிந்த அசாதரண சூழ்நிலையால் வீட்டிலுள்ளவர்கள் வீட்டின் வாசல் கதவை மூட மறந்துவிட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் இவர்களை வரவேற்கவில்லை.
வீட்டிற்குள் மின்சாரம் இல்லை என்பதை அங்கு எரிந்து கொண்டிருந்த மெழுகுவரத்தி சாட்சியாக இருந்தது. ஆனால் தொலைக்காட்சியில் ஒரு காட்சி திரும்பத் திரும்ப தெரிந்து கொண்டிருந்து. நண்பரின் மனைவி சோர்ந்து போய் கணவரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நண்பரோ தொலைக்காட்சியை பலமுறை நிறுத்தியும் அது நிற்காமல் காட்சி தெரிந்து கொண்டே இருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்து பரமசாமியும் சுந்தரியும் திகைத்தார்கள்.நண்பர் யாரோ ஒரு பெண்ணின் தோளில் கைபோட்டபடி படம் பார்த்துக் கொண்டிருந்த காட்சிதான் அது. பேராசைப்பட்டு வானத்திலிருந்து இறங்கி வந்த மூட்டையிலிருந்து எடுத்து வந்து சட்டலைட் டெக்கோடர் காட்டை தனது வீட்டு டொக்கோடரில் போட்ட வினையைத்தான் நண்பர் அனுபவித்துக் கொண்டிருந்தார். 
வீட்டில் இராமனாகவும் வெளியில் கிருஸ்ணனாகவும் நடந்து கொண்ட நண்பரின் சுயமுகம் அவர் வீட்டில் வெளிப்பட்டுக கொண்டிருந்தது. அதற்குள் அவர்களால் நிற்க முடியவில்லை. தாமாக வந்தது போலவே அவர்கள் நண்பரின் வீட்டிலிருந்து வெளியேற முற்படுகையில்’சாமி இங்கை பார்த்ததை தயவு செய்து ஊருக்குள் சொல்லிப் போடதையுங்கோ’ இது பேயின் விளையாட்டு, நீங்களும் ரிவியில் பார்ப்பதை நம்பாதையுங்கோ என நண்பர் கெஞ்சுவது போல் சொன்னார்;.;;.இருவரும் தலையாட்டிவிட்டு வெளியேறுகையில் மூட்டையிலிருந்து எடுத்து வந்திருந்த பெனறைவ், கமராஸபைகர் காட், சட்லைட்டெக்கோடர் காட் வைத்திருந்த பயத்தில் பரமசாமிக்கு வேர்க்கத்  தொடங்கியது. தனது கைக்குள் இருப்பது என்னென்ன திருவிளையாடல்களைக் காட்டப் போகிறதோ எனப் பயந்து மனைவிக்கு தெரியாமல் கைகைளை விரித்து நிலத்தில் போட்டுவிட்டார்.
மூட்டையில் வந்திறங்கிய பென்றைவ், கமராஸ்பைகர்காட், டெககோடர் காட் ஆகிவற்றை பேராசையில் எடுத்துக் கொண்டு போனவர்கள் இதற்கள் என்ன இருக்கும் என பரீட்சித்தப் பார்க்கவும் அவை அவரவர் செய்து மூடிமறைக்கப்பட்ட தவறுகளை குடும்பத்திற்குள் எல்லோருக்கும் தெரியப்படுத்த  குடும்பங்களில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டு ஊரே கலவரமாகிப் போய்விட்டது. பரமசாமி, சுந்தரி வாழ்ந்த ஊரில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் இதே நிலைமைதான். உலகமே குழம்பிப் போய்க் கிடந்தது.
இது பேய் பிசாசின் வேலைதான் எனப் பத்திரிகைள் சில எழுதின.இது வானத்தில் மிதக்கும் சட்லைட்டின் வேலைதான் இது என இன்னும் சில பத்திரிகைகள் எழுதின. ஆனால் ஓருசில வெளிநாட்டுப் பத்திரிகைகள் இது வேற்றக்கிரகத்தின் அதீத தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதர்களை வேவு பார்க்கும் செயல், மனிதர்களால் கண்டறிய முடியாதவாறு பூமியில் வந்திறங்கும் மனிதர்களைவிட பலவாயிரம் தனிமனித மூளை வளர்ச்சியுள்ள வேற்றக்கிரக உயிரினங்களின் பயமுறுத்தல் இது. பூமி மிது போர் தொடுக்கும் முன்னேற்பாடுதான் என எழுதின.
உலகம் திகைத்துப் போயிருந்த அன்றிரவு பரமசாமியும் சுந்தரியும் மிகவும் அச்சத்துடனயே நித்திரைக்குப் போனார்கள். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பயத்துடன் போய் கதவைத் திறந்தார்கள்.கதவடியில் இரண்டு அழகாண பெண்கள் புன்முறுவல் பூத்தபடி  நின்றிருந்தார்கள்.பரமசாமி திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தார் நேரம் 2.30 மணி காட்டியது. அந்த அழகான இரண்டு பெண்களில் ஒருத்தி மஞ்சள் நிறச் சேலையிலும் இன்னொருத்தி சிவப்புநிறச்சேலையிலும் ஒய்யாரமாக நின்றார்கள். அவர்களிலிருந்து ஒரு சுகந்தமான நறுமணம் வந்து கொண்டிருந்தது. பேய்களும் பெண்கள் வடிவில் வரும் கேள்விப்பட்டிருந்ததால் இவர்கள் பேய்தானோ என பரமசாமியும் சுந்தரியும் நினைக்க’ நீங்கள் இருவருமே எங்களை பேய்யென்று ஒரே மாதிரி நினைக்கிறீர்கள், நாங்கள் பேய்கள் அல்ல, உங்களைப் போல மனிதர்கள்தான், உங்கள் இருவரையும் எங்கள் ஊருக்கு அழைத்துக் கொண்டு போக வந்திருக்கிறோம்’ என அந்த இரு அழகிகளும் தமிழில் தாம் நினைத்ததை சொன்னதும் திகைத்த இருவரும் சிலையாக நிற்க’வாருங்கள் என இருவரின கையையும் மெதுவாக பிடிக்க, பரமசாமியின் உடலுக்குள்ளும் சுந்தரியின் உடலுக்குள்ளும் ஒரு உணர்வு பரவத் தொடங்கியது.
மந்திரித்துவிட்ட கோழி போல அந்த அழகான பெண்களுக்குப் பின்னால் பரமசாமியும் சுந்தரியும் சென்றார்கள். ஒரு நிமிடத்திற்குள் அவர்கள் வீதியில் நின்ற காரொன்றில் அவர்களை ஏற்றிவிட்டு பக்கத்திற்கு ஒருவராக அழகிகள் இருவரும் உட்கார்ந்திருக்க கார் புறப்பட்டது. புறப்பட்ட கார் மெதுவாக மேலெழுந்து. பரமசாமிகு;கம் சுந்தரிக்கும் அது புது அனுபவமாகத் தோன்றியது. மனதில் பயம் இல்லாது சுகமா இருந்தது. அழகிகள் இருவரினதும் கைகளும் இவர்களின் உடலில் பட்டதும் இவர்களின் நரம்பு மண்டலங்கள் மூளை என்பன ஒருவிதமான புதிய உணர்வைப் பெற்றுக் கொண்டதை அவர்கள் உணரந்தார்கள்.
கார் மெலெழுந்ததும் ஒரு இடத்தில் நின்றது. அழகிககள் இருவரும் கதவுகளை திறந்து இறங்கிக் கொண்டே’வாருங்கள்’ என அழைத்தார்கள். அவர்கள் இருவரும் பூமியிலிருந்து பலவாயிரம் கோடி கிலோமீற்றர் அப்பாலிலிருந்த ஒரு தளம்.
அது ஒரு விமானத்தளம் போலிருந்தது. இவர்கள் இருவரும் அந்தத் தளத்தில் காலை வைத்ததும் ‘வாருங்கள் வாருங்கள் உங்களை மாங்கதிர் கிரகத்தின் பிரபஞ்ச தளத்தினராகிய நாங்கள் வரவேற்கிறோம்’ என ஆண்களும் பெண்களுமாக அங்கு நின்ற நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ; தமிழில் வரவேற்க, நாங்கள் காண்பது கனவா நினைவா என பரமசாமியும் சுந்தரியும் தடுமாற, நீங்கள் கனவு உலகத்தில் நிற்கவில்லை, பூமியைப் பொல பலமடங்கு nhரிய மாங்கதிர் கிரகத்தின் போக்குவரத்திற்கான பிரபஞ்சத் தளத்திலேதான் நிற்கிறீர்கள், இன்னும் சில நிமிடத்தில் உங்கள் பூமியை உங்களுக்குக் காட்டுவோம், பூமியில் இப்பொழுது நீங்கள் நித்திரை கொள்ளும் நேரம் முதலில் நித்திரை கொள்ளுங்கள், நீங்களிருவரும் நித்திரையால் எழுந்ததும் பூமியைக் காட்டுவோம் அதில் உங்கள் வீட்டையும் பார்க்கலாம்’ என்று ஒரு ஆண் தமிழில் சொன்னான்.
அவர்களிருவரையும் படுக்கை அறை வாசல்வரை  இரு பெண்கள் அழைத்துச் சென்று விட்டனர். பரமசாமியும் சுந்தரியும் பூமியிலிருந்து பலவாயிரம் கோடி கிலோமீற்றர் அப்பாலுள்ள அழகான நவீனமான பிரபஞ்சத் தளத்தில் உள்ள படுக்கை அறைக்குள் நுழைகிறார்கள். படுக்கை அறையைப் பார்த்ததும் அவர்களின் வியப்புக்கு அளவே இல்லை.
தொடரும்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *