Thursday, January 18, 2018

.
Breaking News

கிரகப் போர் 3 ..} காசியரின் பேரன்.

கிரகப் போர் 3 ..} காசியரின் பேரன்.
வீட்டுக்கு வெளியே பார்த்த சுந்தரி ‘யையோ…..யையோ…..யையோ’ என முதல் எழுத்தான ஐ யை விட்டிட்டுச் சத்தம் போட்டுச் சொல்லுவதற்கான  காரணம் உண்டு.
கணவன் சாமி உருளைக்கிழங்கு வாங்குவதற்கு போய்  குறிப்பிட்ட கடையில் கிடைக்காமல் வேறு ஒரு கடைக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்தார். வீட்டு வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து கொண்டே கடையின் பெயரைச் சொல்லி உருளைக்கிழங்கு அங்கு இல்லையென்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே’ஐயையோ..’சுந்தரி சத்தம் போட,பரமசாமி ‘அதற்கு ஏன் சுடுதண்ணியை காலில ஊத்தின மாதிரி அபசகுணமாய் ஐயையோ என துள்ளுறாய் எனச் சொல்ல அன்றிலிருந்து ‘ஐ’யைச் சொல்லாமல் ‘யையோ’ எனச் சொல்வதை நிறுத்திவிட்டாள்.
மனைவியின் ‘யையோ’சத்தத்தைக் கேட்டு யன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்த சாமி திகைத்துப் போய் நின்றார். வீட்டிலிருந்து ஐம்பது மீற்றர் தூரத்திலிருந்த மைதானத்தில் பலர் கூடிநின்று வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
சாமியும் யன்னலுக்கூடாக வானத்தை நோக்கிப் பார்த்தார். ஒரு பொதி போன்ற பொருள் கீழ்நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. என்னவாக இருக்கும்,சிலவேளை வேற்றக் கிரகவாசிகளின் பறக்கும் தட்டாக இருக்குமோ என்ற எண்ணியவாறு பயத்துடன் அந்த இடத்தை நோக்கி நடந்தார் சாமி. சுந்தரி யன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதுவாக இருக்கும்,மைதானத்தில் கூடியிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர். பலர் இது வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டுத்தான் என்ற முடிவுடன் வேறு அவர்கள் எங்களைப் பொல இருப்பார்களோ வேறு உருவத்தில் இருப்பார்களோ என்ற ஆவலுடன் காத்திருந்தனர்.
நேரஞ் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாகியது.நிலத்தை நோக்கி அந்த பொதி போன்ற உருவம் நெருங்க நெருங்க கூடியிருந்தவர்கள் மனதில் ஒரு பயமும் ஆவலும் தோன்றத் தொடங்கியது.
வேகமாக நிலத்தை நோக்கி வராமல் அந்தப் பெகாதி போன்ற உருவம் காற்றில் மிதந்து வருவதைப் போல மிதந்து வந்து நிலத்தைத் தொட்டது.
அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை கண்ணிமைக்காமல் அந்தப் பொதியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஊசி போட்டால் கேட்குமளவிற்கு பெரும் அமைதி. சில விநாடிகள் சென்றன. பொதியின் மேல்பகுதி மெதுவாகத் திறந்தது.யாருமே அருகில் செல்லத் தயங்கினர். ஆனால் பொதிக்குள் என்ன இருக்கின்றது என்பதை அறியும் ஆவலிலஇ ஒருவர் இருவர் என அருகில் செல்லத் தொடங்கினர்.
தங்களுக்கு வானத்திலிருந்து வந்த பொதியாலஇ ஆபத்து இல்லையென்பதை திடப்படுத்திக் கொண்ட கூட்டம் அந்தப் பொதியை சுற்றி நின்றது. திறந்த பகுதிக்கூடாக எட்டிப் பார்த்தனர். பார்த்தவர்களுக்கு வியப்பாக இருந்தது.
உள்ளே புகைப்படம் எடுத்ததன் பின்பு கணிணியில் செருகி எடுத்த படங்களை கணிணித் திரையில் பார்க்கக்கூடிய ஸ்பைகர் காட்கள், பென்றைவ்வகள், தொலைக்காட்சியில் சட்லைட் ஊடாக படங்களைப் பார்ப்பதற்குரிய காட்கள் என நிறைய இருந்தன.
அவற்றை எடுக்கவா விடவா என சுற்றிநின்றவர்கள் தயங்கினர். பரமசாமி தயக்கத்தடன் மற்றவர்களின் தோளிற்கு மேலால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவர் துனிந்து ஸ்பைகர் காட், பென்றைவ், சட்லைட்காட்டை எடுத்தார். எல்லோரும்  எடுத்தவரைப் பார்த்தார்கள் அவருக்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதைக் கண்டதும் ஒருவர் இருவர் என எல்லோரும் எடுக்கத் தொடங்கினார்கள்.
இதற்கிடையில் வானத்திலிருந்து பொதி ஒன்று நிலத்தில் விழுந்துவிட்டது என்ற செய்தி காவல்துறைக்கு எட்ட காவல்துறையும் வந்ததுவிட்டது. திருவிழாவில் சுண்டலை கைநிறைய அள்ளுவது போல ஒவ்வொருவரும் பொதிக்குள் இருந்ததை அள்ளிக் கொண்டு மெதுவாக விலகினார்கள். சாமியும் கைகொள்ளுமளவிற்கு அள்ளி எடுத்தார்.
காவல்துறையினர் இப்பொதி எப்படி வானத்திலிருந்து வந்ததை அங்கிருந்தவர்களிடம் விசாரித்தறிந்துவிட்டு பொதியை தமது வாகனத்தில் ஏற்றினர். வாகனத்திலிருந்த காவல்துறையினர் பொதியிலிருந்து ஸ்பைகர் காட், பென் றைவ், சட்லைட் காட் போன்வற்றை அள்ளி காற்சட்டைப் பைக்குள் நிரப்பினர்.
கைகளால் அள்ளி எடுத்த மக்களும் காவல்துறையினரும் அல்லோலகல்லோலப்படப் பொகின்றனர் என்பதை அவர்கள் அப்பொழுது உணரவில்லை
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *