Friday, February 23, 2018

.
Breaking News

கடமை… (சிறுகதை)…. திருமதி-எஸ்.ரேணுகா ….இலங்கை.

கடமை…  (சிறுகதை)…. திருமதி-எஸ்.ரேணுகா ….இலங்கை.

அம்மாவை எல்டேஜ் ஹோமில் சேர்த்தாயிற்று. மிக நவீனமான நாகரிகமான கட்டடம் பழங்காலத்து அரண்மனைகள் மாதிரி கோடிகளைக் கொட்டிக் குவித்துத்திருக்கிறார்தள். கணிசமான தொகைக்கும் அதிகமாக காசோலையைக் கிழித்துக் கொடுத்த போது ஆச்சரியமாகிப்போனது. எனக்குத்தான் அந்த அதிசயக் குளிர்மையிலும் வியர்த்து ஊறுகிறது.தப்புச் செய்து விட்டோமோ இதயம் தாறுமாறாகத் துடிக்கிறது. கண்ணீரை விழுங்கிக் கொண்டு வெளியே பார்வையை நழுவ விடுகிறேன்.

ஊரிலிருந்து நிறையத் தூரம் நிழல் வாகைத் தோப்பு வெயில் படாத இயற்கையின் சிருஸ்டிப்பின் அற்புதம். வடிகட்டப்பட்ட பசுமை மலைகள் புல் முடிச்சுக்களுக்கிடையே ஆரவாரமில்லாமல் கால்களை வருடிய சிற்றாறுகள். மதிய வேளையிலும் புற்களின் தலைகளில் சூரியன் கரைக்காத பனித்துளிகன். வலிக்காத வெயில் பூச்சொரிந்து வரவேற்கும் பெயர் தெரியாத பெரு மரங்கள் சொரிந்த பூக்களிடையே தேன் தேடும் சிட்டான்கள். நிசப்தமில்லாத நிசப்தம் ரம்மியமான சூழல் கவனமாகப் பாதுகாக்கப்பட்ட சூழல் வியக்காமல் இருக்க முடியவில்லை. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடான இணக்கம். எனக்குத்தான் வலிக்கிறது. அம்மாவை எல்டேஜ்; ஹோமில் சேர்த்;;தாயிற்று.

எங்களின் அந்தப் பெரிய வீட்டை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வெளிநாட்டில் இருந்தவாறே அண்ணன் வாடகைக்கு கொடுத்தாயிற்று. நேற்றுச் சாயந்திரம் சாமான் சக்கட்டுகளை சிறிய வீட்டிற்குள் போட்டு பூட்டியாயிற்று. வீட்டைக் கையளித்தாயிற்று. அன்னியமாக ஒரு இரவு தங்கி மறுநாள் விடிகாலையில் புறப்பட்டு இங்கு வந்து சேர மீண்டும் ஒரு இரவு முடிந்திருந்தது. அம்மா

மௌனமாகவே பயணம் முழுவதும் உட்கார்ந்து இருந்தாள். கொடுத்ததைச் சாப்பிட்டாள். அந்த மௌனம் தகிக்கிறது. கழுகு அடித்துப்போட்ட புறாக்குஞ்சாக ஒடுங்கிப் போயிருந்தாள் அம்மா. ஏதாவது பேசியிருக்கலாம். அந்த மௌனத்தைக் கொஞ்சம் உடைத்து தாய்மையின் உச்ச பட்ச வலியைக் கொட்டியிருக்கலாம். கொஞ்சம் கண்ணீராவது …. ம்கும்.. அம்மாவின் முகத்தைப் பார்க்க எனக்குத் தைரியமில்லை.அந்த மௌனம் திpருகிப் போடுகிறது. முந்தானையால் தலை துவட்டி முகம் துடைத்து விட்ட வாசத்தை காற்றிலிருந்து பிpரி;த்து நுகர முற்படுகிறது என் புலன். இன்னும் மணக்கிறது.

அம்மாவின் புலன்கள் அம்மாவோடு முரண்படாத வரைக்கும் மறந்து விடக்கூடிய துரோகமா இது..? எனக்குள் வலிக்கிறது. ஏராளமான அழுகை வரத் தவிக்கிறது. அழுதுவிடுவோமா…… அம்மாவை எல்டேஜ் ஹோமில் சேர்த்தாயிற்று. பெரிய டெனிஸ் மைதானம் மாதிரி விசாலமான வரவேற்புக் கூடம். முழுiமாகக் குளிரூட்டப்பட்டிருக்கிறது. இது அதிகப்படியோ…? அம்மாவால் இந்தக்குளிரைத் தாங்க முடியுமோ….?மனம் கவனமாகக் கவலைப்படுகிறது.

அம்மாவின் உடைமைகளை இரண்டு பெரிய சூட்கேசுகளில் அடக்கியாயிற்று. அம்மாவிற்கான அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்க்கவே கூசியது எனக்கு. ஒரு எயார்கோஸ்டஸ் மாதிரி ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரவேற்பாளிpனி மாதிரி. என்ன ஒரு கம்பீரம் .. ஜானு தன்னை அற்முகப்படுத்திய படியே அம்மாவின் பெட்டிகளை இழுத்தபடி முன்னால் செல்ல என்பின்னால் ஒரு பூனைக்குட்டி மாதிரி தயங்கித் தயங்கி வருகின்ற அம்மாவை திரும்பித் திரும்பி பார்க்கிறேன் வலிக்கிறது. அம்மாவை எல்டேஜ் ஹோமில் சேர்த்தாயிற்று.

விசாலமான பெரிய அறை, தந்த வர்ணம் , இரண்டு கட்டில், ஒரு சின்ன மேசை சத்தியமாக முகம் பார்க்கலாம் . இரண்டு நாற்காலிகள் ரி.வி, பிறிஜ் உறுத்தாத வர்ணத்தில் நிறைய ஓவியங்கள், இந்த பகலிலும் ஆச்சரியமானஇருள் விரவிக்கிடக்கிறது .ஒரேயொரு செவ்வக வடிவ ஓவியம் என்னை இழுத்து நிறுத்துகிறது. முத்துவர்ணச் செவ்வரத்தம்; பூ. என்னஒரு தத்ரூபம் என்ன இருக்கிறது அதில். கறுப்பு மின்னல் பின்னணியால் நேர்த்தியாக வரைந்து வர்ணம் குழைக்கப்பட்ட அந்தப் பூவிற்குள் அம்மாவின் முகம் ஒளிந்து கொண்டு பூச்சாண்டி காட்டுகிறது. பிரமை சுடுகிறது. கண்ணீர் சுடுகிறது. நெஞ்சுக்குள் நினைவுகள் சுருங்குகின்றன. அம்மாவை எல்டேஜ் ஹோமில் சேர்த்தாயிற்று.

அம்மா கட்டிலில் ஃபோம் மெத்தைக்குள் புதைந்து போயிருக்கிறாள். இப்போதும் மௌனம் அடைகாக்கிறது. அம்மாவிற்குத் தெரியாமல் அம்மாவைப் பார்க்கிறேன். பெரிய கண்கள் செவ்விள நீர் நிறம். மெலிந்த உடல் நரைத்தும் நரைக்காத சுருட்டை முடி. கொள்ளையழகு அம்மா. அந்தக் காலத்து நடிகைகள் மாதிரி. அம்மாவின் அருகில் படுக்கப் போட்டி, கையைப்பிடித்துக் கொண்டு கடைத்தெருவிற்கு திருவிழாவிற்குப் போய் வரப்போட்டி. பெரும்பாலும் எனக்கும் தங்கச்சிக்கும் தான் இழுபறியாக இருக்கும்…..

அம்மா அந்நியமாக உட்கார்ந்து இருக்கிறாள். பெரிய கண்களில் சிறிதளவு நீர் பரவுகிறது. மாராப்புச் சேலையில் சொந்தமாய்ச் சில துளிகள் சொட்டுகின்றன. என்னால் என்னைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அம்மாவின் நடுங்கிய கைகளைப் பிடித்துக் கொள்கிறேன். அப்படியே தரையில் சரிந்து மடியில் புதைகிறேன். தாய்மடி வாசம்… மீண்டும் இந்த வாசத்தை அனுபவிக்கக் கிட்டுமா…..? கிட்டாதா…..? அம்மாவின்

கைவிரல்கள் மெல்லிய நடுக்கத்துடன் என் முடியைக் கலைத்துக் கலைத்து கதைகள் சொல்லுகின்றன. அம்மாவின் கண்கள் இலக்கின்றி திரிந்து மூடுகின்றன. என்னவோ யாசிக்கின்றன….. ஒரு தாய்க்கு இது தண்டனையா….? என்கிறதோ….

இன்றோ… நாளையோ..இல்லை நாளை மறுநாளோ….. இல்லாமல் போகின்ற சடத்திற்கு இந்தத் தவிப்பு அவசியந்தானா என்கிறதோ… நாலுபிள்ளைகளையும் உச்சத்தில உயர்த்திவிட்ட எனக்கா இந்தக் கொடுமை என்கிறதோ…அம்மா எதையாவது கொஞ்சமாவது சொல்லிவிடு என்மனச்சாட்சி என்னைக் கொல்கிறது.

புறப்படுத்துவதற்கு முன் என் வீட்டு வாசலில் கால்கள் தயங்குகின்றன. ஐயாவும் அம்மாவும் வாழ்ந்த வீடு….. நான்கு குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி விட்ட வீடு… நாலு பேருக்கு நடுவில் நான் பிறந்தவன், பெரிய படிப்புக்கள் படித்து பட்டங்களைப் பின்னோடு ஒட்டிக் கொண்டு தூரநாடுகளில் ஏராளம் வசதிகளோடும் வாய்ப்புக்களோடும் அந்தந்த அரசாங்கத்தால் தத்தெடுக்கப்பட்டவர்கள் நாங்கள். அக்காவும் தங்கச்சியும் பெரிய வைத்திய நிபுணர்கள், அண்ணா விமானப் பொறியியலாளர் நான் விண்வெளி ஆய்வுப் பொறியியலாளர் கிட்டத்தட்ட நாடு முழுவதும் சுற்றியாகிவிட்டது. உலகத்தின் உச்சத்திலிருப்பவர்கள் தரையைத்தொடாமலே வருடக்கணக்கில் வாழ்பவர்கள், இருந்துமென்ன அம்மாவை எல்டேஜ் ஹோமில் சேர்த்தாயிற்று.

ஐயா ஒரு முறை கூட வெளிநாட்டுக்கு வர சம்மதிக்கவேயில்லை. ஐயா இருந்திருந்தால் அம்மா அன்னியப்பட்டிருக்க மாட்டா. ஐயா கடந்த வருடம் சட்டென்று போனது கூட அம்மாவால் ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். தம்பி எங்களால அங்கயெல்லாம் வரமுடியாது…. நீ போய் சடங்குகளெல்லாத்தையும்

ஒண்டு விடாம செய்து போடு இஞ்ச நேரடியாப் பாக்கக் கூடியது மாதிரி ஏற்பாடு செய்…….

அப்படித்தான் நாலு தேசத்திலும் ஐயாவின் செத்தவீடு கலியாணக் கொண்டாட்டமாய் நடந்து முடிந்தது. இங்கே தலைப்பிள்ளையில்லாமலே ஐயாவின் சடங்குகளைல்லாவற்றையும் கடைசிப்பிள்ளை நான் செய்ய வீடியோக்காரன் ஒண்டு விடாமல் ஓடிஓடி எல்லாவற்றையும் படமாகச் சுருட்டச் சுருட்ட என் கண்ணீரில் தசை ஆடுகிறது.

அம்மா ஒடுங்கிப்போனா.. ஒரு தலையிடி தடிமன் காய்ச்சலெண்டு பாயிலை படுக்காத ஐயாவின் கையருகில் பொசுக்கென்ற மரணம் ஒரேயடியாய் அடித்துத் தூக்கிப் போட்டிருந்தது.

ஐயாவின் அந்தியெட்டியையும் பல கமராக்கள் உள்வாங்கிப் பல தேசங்களுக்கு அனுப்பிக் கொண்டேயிக்க பெற்ற பிள்ளைகள் நாலுதேசத்திலும் நானூறு பேருக்குச் சாப்பாடு போட்டு நாலுவிதமாகப் புத்தகம் அடித்து சாவுக் கலியாணம் கொண்டாடி முடித்திருக்க ஐயாவும் ஞாபகத்திலிருந்து விலகத்தொடங்கினார்.

அம்மாவ….. எப்பிடியும் அங்கால கொண்டு போயிட வேணும்…. ஆண்டுத் திதி முடியட்டும் ஓம் மோன…. நீ சொல்லிறதுதான் சரி…..நீ பதட்டப் படாமல் போ.. வருசக் காரியத்துக்கு வரேக்க கொம்மாவக் கூட்டிக் கொண்டு போற மாதிரி வா…நாலு பேர் இருக்கிறியள் விரும்பின பிள்ளையோட அவா இருக்கட்டும்..பின்னிட்ட நேரம் பிள்ள குட்டியளோட இருக்கிறது தான் நல்லது.

குஞ்சியப்புவைக் கண்ணீரோடு பார்க்கிறேன் . அம்மாவை எல்டேஜ் ஹோமில் எல்லா வசதிகளோடும் சேர்த்தாயிற்று…மனம் ஒரு தாவு தாவி விட்ட இடத்திற்கு வருகிறது.

ஒரு வருசம்… எப்பிடியும் அம்மாவ எங்களோட கூட்;டி போயிடுவம் அந்த எண்ணம் தந்த நிம்மதியில் நானும் வெளிக்கிட்டு வந்திட்டன். நான் போய்ச் சேரமுந்தி என்ர வீட்டுக்குச் சாவு கொண்டாட என்ர சகோதரர்கள் வந்திட்டினம். சாவகாசமாக ஒரு நாள் அம்மாவக் கூப்பிட்டு வருவது பற்றிச் சொல்லிப் பாத்தன். அண்ணா அண்ணியப் பாத்த சமயத்திலேயே பதிலின் இறுதிப்பகுதி எனக்கு விளங்கி விட்டது. அண்ணி பிரியப்பட வில்லை. அண்ணா வழமையிலேயே அதிகம் பேசமாட்டார் இப்போது அது கை கொடுத்தது. வீடு அத்தனை வசதியாய் இல்லை பிள்ளைகளின் சிநேகிதர் வந்து போவினம். மாமி பாவம் சுதந்திரமா இருந்து பழக்கப்பட்டவா…இந்தக் குளிர் வெக்கையெண்டு நாங்கள் அவதிப்படுகிற மாதிரி அவாவால ஏலுமே.. அண்ணா உனக்காக கந்தச~;டியிலை கடும் விரதம் இருந்து கரும்பில தொட்டில் கட்டி காவடி எடுத்து கதிர்காமத்துக்கு கரைப்பாதை போனவையாம். சொர்ணம் ஆச்சியும் கோணாமலையப்புவும்…ம்..

இப்ப அக்காவின் முறை என்ர மனதில சின்னதாக வொரு ஆதங்கம்…அக்கா….தலைப்பிள்ளை பொம்பிளப் பிள்ளை வேணுமெண்டுதான் நினைச்சனான் இதுவெண்டாலும் பெட்டைக்குட்டியாப் பிறந்திட்டுது. தலைமாட்டில இருந்து நாலு சொட்டு கண்ணீராவது விடாதே என்ர ராசாத்தி. அம்மாவின் செல்லமான வார்த்தைகள் காது மடல்களை உரசிப்போகின்றன. அக்கா…தம்பி இதில நான் சொல்லிறதுக்கு என்ன இருக்கு. அண்ணி சொல்லுறதுதான் சரி அம்மாவுக்கு இங்கத்தை சூழல் ஒத்துவராது. அதோடை எங்கட பெடி பெட்டையளோடயும் அம்மா ஒத்துப் போகமாட்டா…எடி சண்டாளி நீயிருக்கிற நாட்டில சனமென்ன அடிப்பாதாளத்தில குழிதோண்டியே குந்தியிருக்குதுகள் சொல்ல வந்த வார்த்தைகளை நாக்கு சுருட்டிக் கொள்கிறது. பிறகென்ன தங்கச்சியின் பக்கமே நான் திரும்பவில்லை.அவளும் ஏதோவொரு சாக்கில்

உள்ளே எழுந்து போக எனது நம்பிக்கை நூலின் இழைகள் அறுந்து கொண்டேயிருக்கின்றன.

பிள்ளைகள் பள்ளிகளுக்கும் உருத்திரா வேலைக்கும் புறப்பட்டு போன பிறகு நான் தனிமைப்பட்டுக் கொள்கிறேன். என் லீவு முடிய இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. என் சொந்த வீட்டை இப்போது புதிதாகப் பார்ப்பது போல பார்க்கிறேன். மூன்றடுக்கு மூன்று படுக்கையறைகள்

கீழ்த் தளம் எங்களுடையது அடுத்த தளம் உருத்திராவின் தாயும் தகப்பனும் மூன்றாவது தளம் ஒரு வடஇந்தியக் குடும்பம். வீடு தாராளம், அம்மாவுக்கு எதே~;டம், இப்ப நான் எடுக்கிற முடிவில் தான் அம்மாவின் சொச்ச காலம் காத்திருக்கிறது.

மூன்ற நாட்கள் மனதோடு போராடிப் போராடி நான்காம் நாள் உருத்திராவோடு கதைச்சுப் பாத்தன். எடுத்த எடுப்பில உங்களுக்கென்ன விசர் பிடிச்சிட்டுதே எண்டிட்டாள். அறத் தொடங்கிய ஒற்றையிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். அவையள் பிள்ளையள் வளந்து பிரீயா இருக்கிறவையளே மாமிய வைச்சிருக்க சம்மதிக்கினமில்லை. உங்களுக்கென்ன வந்தது.அவவை இஞ்ச வைச்சு ஆர் பராமரிக்கிறது.ஷ உருத்திரா அவாவை ஆரும் பராமரிக்கத் வேண்டாம் அவா நல்லாத்தான் இருக்கிறா, தன்ர பாட்டிலை ஒருபக்கம் இருந்திற்றுப் போறா| எனக்கு குரல் தளதளத்துப் போனது. அழுகை வரப்பார்த்தது. இரவுச் சாப்பாட்டில் பிள்ளைகளிடம் மெல்லக் கேட்டுப் பார்க்கிறேன், பிள்ளையளும் ஒரேயடியாக மறுத்திட்டினம். ஏன்? எதற்கு? என் மனது கேட்ட வினாக்களிற்கு சொல்வதற்கு காரணங்கள் இருக்கிறதோ? நான் காதுகளைப் பொத்திக் கொள்கிறேன். வயோதிபம் இயற்கையின் கொடுமையா? நாகரிகத்திலிருந்து நழுவியதா? முதுமைக்கு இளையவர்கள் சொல்லிக் கொள்ளும் அர்த்தம் என்ன? நாளைய

வயோதிகத்தை இவர்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறார்கள். உகம் முழுவதும் வயோதிபர் காப்பு நிலையங்களால் நிரம்பிவிடப் போகிறதா? ஷஷஉருத்திரா கொஞ்சம் யோசிச்சுப் பார்|| பிள்ளைகளோடு என் மாமனும் மாமியும் சிரிக்கிறார்கள். என் நம்பிக்கை நூலின் இழைகளைக் காணவேயில்லை. எப்போதோ காணாமல் போய் விட்டன. மேலே உருத்திராவும் அவளின் தாயும் தகப்பனும் ஏதோ இரகசியமாய் Nபிச் சிரிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில வாழைத்தோட்டத்தில கோவணத்தோட கிடந்து புரண்ட பொன்னம்பலத்தார் இப்ப அவர அவற்ற சொந்தங்களே பாத்து மட்டுக்கட்ட மாட்டீனம். நீளக் காற்சட்டை, பு~; N~ட், கம்பளிக் கோட், கழுத்தைச் சுற்றின மவ்லர், றிppபில் பைவ் சிகரெட்…………. அதுக்கும் மேல என்ர மாமி பூரணம்.. தட்டுச்சுத்து சேலையும் மாறு தாவணியும் ஓலைப் பையுமாய் கடைகண்ணிக்குப் போய் வந்து கொட்டிலுக்குள்ள சீவிச்ச மனிசி நீளச் சட்டை, கண்ணாடி , சுருள் கொண்டை, போகவரக் கார் , போதாதற்கு கொஞ்சம் ஆங்கிலம் என்று அமர்க்களப் படுத்திறா. பார்க்கப் பார்க்கச் சிரிப்புத்தான் வருமெனக்கு… உருத்திராவே சில சமயம் ஷஷஅம்மாவும் அப்பாவும் பழச எல்லாம் மறந்திட்டினம்|| என்று ஆற்றாமையோடு சொல்லுவதுமுண்டு. எண்டாலும்அது அவளின்ர தாய் தகப்பன். சீ….என்ர புத்தி இப்படிப் போகுது. ஏன் ஆரிலையும் பொறாமப் படவேணும். அது அது அவையவையின்ர குடுப்பினை.

அப்பிடி இப்பிடியெண்டு ஆண்டுமொண்டு ஓடிப்போய் விட்டது. குஞ்சியப்பு திதி பாத்து அறிவித்து விட்டார். இடையில் ஒருமித்த முடிவொண்டு எனக்கு அறிவிக்கப்பட்டது. ஷஷஅம்மாவை ஏதாவதொரு வசதியான ஹோமாகப் பார்த்துச் சேர்த்து விடு|| எவ்வளவு காசெண்டாலும் பரவாயில்ல அவவின்ர நிம்மதிதான் முக்கியம். தூ………….

நல்லா வாயில வருகுது எனக்கு. எனக்குஞ் சேத்துத ;தான். சரி ஆண்டுத் திதியையும் வீடியோ எடுக்கிறதோ…? லைவாகப் பாக்கப்போறியளே…. ? பாதி நக்கலாகக் கேட்டு விட்டேன். அதோட அம்மாவக் ஹோமில சேர்க்கிற சம்பிரதாயச் சடங்கையும் எடுத்து அனுப்பிறன். சொல்லவில்லை உள்ளுக்குள் வார்த்தைகளை விழுங்கிக்கொண்டேன்.

ஆண்டுத் திதி நிகழ்வுகளில் என் மனம் ஒட்டவேயில்லை, பராதிப்படுகிறது. ஷஷ அவாவச் சரியாப் பராமரிக்கக் கூடிய இடமாப்பாத்து விடு மோன, சொந்த பந்தங்கள நம்பாத, பெத்த பிள்ளையளே நாய் பேயெண்டு சினக்கிற காலம்… ஏதோ காலும் கையும் ஆடிற வரைக்குந்தான் எல்லாம், காசுக்காக நாலு நாளைக்கு ஏந்தி இறக்குங்கள், ஒரு நோய் நொடியைண்டு விழுந்திட்டால் சீறிச் சினக்க நேரஞ் செல்லாது. சீலை பாவாடையோட வாயால வயித்தால போட்டுதெண்டால் கேக்க வேண்டாம்…. ஊர் முழுக்க காணிபூமி சொத்துப்பத்தெண்டிருந்த செல்லாக்கிழவி புழுத்துச் செத்த கதை தெரியுந்தானே. இத்தனைக்கும் சொந்த மருமக்கள்….. எனக்குள் ஏதோ சுருக்கென்று தைத்தது. நடுங்கும் கரங்களால் அம்மாவின் மெலிந்த கைகளை வருடிக்கொடுக்கிறேன். மனது துண்டு துண்டாக நொருங்கிக் கிடக்கிறது. என் கையாலாகாத் தனத்தின் மீது எனக்கே கோபம் கோபமாக வருகிறது. அம்மாவை எல்டேஜ் ஹோமில் சேர்த்தாயிற்று. அம்மாவை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அந்த நீண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கிறேன். நிறைய அழவேண்டும். தனிமையில் அழவேண்டும். அம்மா ஏதாவது சொல்லியிருக்கலாம். அந்த மௌனம் தான் என்னை இப்போது அறுத்துக் கொல்கிறது…. நாலு பிள்ளைகளைப் பெற்றும் சொந்தமில்லாத யாரோ ஒருத்தியை சொந்தக்காரியாக்கிவிட்டு சொந்த மண்ணை விட்டு நான் விலகிக் கொள்கிறேன் பொறுப்புக்களும் கடமைகளும் விலகிக் கொள்ளுமா?

மூன்று வருடங்களில் மூன்று தடவை அம்மாவைப் போய்ப் பார்த்து விட்டு வந்துவிட்டேன். ஆனால் என் மனது மட்டும் சரியாக இல்லை என்பது மட்டும் புரிகிறது. இப்படியே போனால் நானொரு உள நோயாளியானாலும் ஆகாலும். பயமாக இருக்கிறது. என் மனதிற்குள் ஒரு தீர்மானத்தோடு நான் இந்தத் தடவை ஊருக்குப் புறப்படுகிறேன். இவருக்கு வேற வேலையில்லை உருத்திரா முகத்தை தோள் மூட்டில் இடித்துக்; கொள்கிறாள். பிள்ளைகள் என்iனை ஒரு விநோதப் பிராணியாகப் பார்க்கிறார்கள். இழுத்து வைச்சு நாலு அறை விடுவமோ… பரபரப்பை கட்டுப்படுத்த பிரயத்தனப்படுகிறேன். அலுவலகத்திற்கு நீண்ட விடுப்பு எடுத்தாயிற்று. என் மனதிற்குள் என் தீர்மானத்தில் தவறேதும் இல்லையென்ற உணர்வு அலாதியான நிம்மதியைத்தர இதுவரை காலமும் இழந்திருந்த நிம்மதி ஓடி வந்து ஒட்டிக் கொண்டது மாதிரி உணர்வு. என் கடமைகளை எனக்குள் பட்டியற் படுத்திக் கொள்கிறேன். அம்மாவின் காலம் வரைக்கும் நான் அம்மாவோடு கூட இருப்பதான எனது தீர்மானத்தில் இனி மாற்றம் ஏதும் இல்லை. என்னை மன்னித்துக் கொள் உருத்திரா……… என் கடமைகளையும் பொறுப்புக்களையும் எனக்கு நினைவூட்டியது உன் மறுப்புத்தான்.

என்றுமில்லாதவாறு நிச்சலமான மனதில் எல்லாமே பரவசமாகத் தெரிகிறது. அம்மாவிடம் செல்லப் போகும் அம்மாவுடன் வசிக்கப் போகும் நாட்களை விரலுக்குள் எண்ணிக் கொள்கிறேன்.

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *