Friday, July 28, 2017

.
Breaking News

சீமான், திருமாவளவனை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்!

சீமான், திருமாவளவனை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்!

பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டிற்கு மாடுகள் வளர்ப்பது அதனை கொன்று தின்பதற்குதான் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறி உள்ளார். எனவே அவரை உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் கைது செய்ய வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர் நாவை அடக்கி பேச வேண்டும்.

சீமான், திருமாவளவன் ஆகியோர் அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். பிரதமர் மோடியின் அரசு 3 ஆண்டுகளாக தவறிய இந்திய பொருளாதாரத்தை சரியான பாதையில் நடத்தி செல்கிறது.

நேரடி வரிவிதிப்பில் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் 90 லட்சம் பேர் வரி செலுத்தி உள்ளனர். தற்போது மறைமுக வரியை ஏமாற்றுபவர்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து தப்ப முடியாது.

சட்ட மன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றது தொடர்பாக தி.மு.க.வினர் குரல் எழுப்பினர். இதில் நாகை எம்.எல்.ஏ. (மனித நேய ஜனநாயக மக்கள் கட்சி) தமிமுன் அன்சாரி பெயரை ஏன் சேர்க்கவில்லை.

சரவணன் எம்.எல்.ஏ. குரலை ஆய்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *