Saturday, November 18, 2017

.
Breaking News

லண்டனில் அப்பாவி மக்கள் மீது வேனை ஏற்றிய ஆசாமி!

லண்டனில்  அப்பாவி மக்கள் மீது வேனை ஏற்றிய ஆசாமி!

வடக்கு லண்டனில் ஃபின்ஸ்பர்ரி பார்க் பள்ளிவாசல் அருகே அதிகாலையில் தொழுகையை முடித்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் ஒன்று பாய்ந்து வந்து மோதிய பயங்கர சம்பவம், மக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. இதில் ஒருவர் மாண்டார். மேலும் எண்மர் காயமடைந்துள்ளனர்.

இந்த வேனை ஒட்டிய 48 வயதுடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வேனுக்குள் இருந்து மேலும் 3 பேர் தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இவர்களுக்கு எதிராக போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, சிறப்பு விசாரணையை மேற்கொண்டுள்ளது. அண்மையில் லண்டன் பாலத்தில் இதே போன்ற பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ள நிலையில் மீண்டும் வாகனங்களைக் கொண்டு அப்பாவி மக்கள் மீது மோதும் பயங்கரவாதம் இங்கு கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது பிரிட்டிஷ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் மீது வாகனத்தை மோதவிட்ட செயல் மிகக் கோரமானது என்று லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்தார்.

பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வந்த பலர் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

இந்தச் சம்பவத்தில் அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருப்பது தமக்கு வேதனை அளித்திருப்பதாக பிரதமர் திரேசா மே குறிப்பிட்டார். இதனை ஒரு பயங்கரவாதச் சம்பவமாகவே போலீசார் கருதுவதாக அவர் சொன்னார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *