Friday, July 21, 2017

.
Breaking News

ஆதரவளிப்பது குறித்து விக்கியுடன் டக்ளஸ் வௌ்ளியன்று பேச்சு!

ஆதரவளிப்பது குறித்து விக்கியுடன் டக்ளஸ் வௌ்ளியன்று பேச்சு!
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னு­டன், ஈ.பி.டி.பியின் செய­லா­ளர் நாய­க­மும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா அலை­பே­சி­யூ­டா­கத் தொடர்புகொண்டு பேசி­யுள்­ளார். முத­ல­மைச்­ச­ருக்­குத் தமது கட்சி ஆத­ரவு வழங்­கு­வ­தாக அவர் கூறி­யுள்­ளார் என்­றும் தெரி­ய­வ­ரு­கின்­றது.
வடக்கு மாகாண சபை­யில் குழப்­ப­க­ர­மான நிலமை தோன்­றி­யுள்­ளது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வடக்கு மாகாண ஆளு­ந­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் ஒரு அணி­யி­னர் முத­ல­மைச்­ச­ரு­ட­னும், இன்­னொரு அணி­யி­னர் இலங்­கைத் தமிழ் அரசுக் கட்சியுடனும் உள்ளனர்.
இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை, அலைபேசியூடாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டுள்ளார் டக்ளஸ் தேவானந்தா.
அவருடன் வடக்கின் தற்போதைய நிலமை தொடர்பில் பேசியுள்ளார். வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு வழங்குவதாகவும் இதன்போது, டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “மேற்படி விடயங்கள் தொடர்பாக நான் பேசவில்லை என்றோ அல்லது பேசினேன் என்றோ கூறமாட்டேன். விடயத்தைக் கூர்ந்து கவனிக்கின்றோம் என்று மாத்திரமே கூறுவேன்” என்றார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *