Friday, July 28, 2017

.
Breaking News

கேரளாவில் வைரஸ் காய்ச்சலுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலி!

கேரளாவில் வைரஸ் காய்ச்சலுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலி!

கேரள மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களாக பரவிவரும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 இருப்பினும், குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 20 ஆயிரம் பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

இதையடுத்து, வைரஸ் தொற்றுக்கு மூலக்காரணமான கொசுக்கள் உற்பத்தி ஆவதையும் பரவுவதையும் தடுக்கு வகையில் மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் அனைத்து கட்சியினரும், தன்னார்வலர்களும், தனியார் தொண்டு நிறுவனத்தாரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து, மாத்திரைகளை கையிருப்பில் வைத்திருக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, இன்று கேரள முதல் மந்திரியை சந்தித்த அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *