Tuesday, November 21, 2017

.
Breaking News

‘எங்கள் தலைவன் விக்னேஸ்வரன்’ மக்கள் பேரெழுச்சியில் அதிர்ந்தது வடக்கு!

‘எங்கள் தலைவன் விக்னேஸ்வரன்’ மக்கள் பேரெழுச்சியில் அதிர்ந்தது வடக்கு!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான தமிழரசு கட்சியின் சதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விக்னேஸ்வரனே தொடந்தும் தமிழ் மக்களுக்கு தலைமையேற்க வேண்டும் எனவும் வலியு றுத்தியும் நேற்றைய தினம் மாபெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த போராட்டத்தோடு வடக்கு மாகாணம் தனது இயல்பான நடவடிக்கைகளை புறக்கணித்து ஹர்த்தாலையும் அனுஷ்டித்திருந்தது. இவ்வாறு தமிழர்கள் தன்னெழுச்சியினால் பேரெழுச்சி கொண்ட இப்போராட்டம் புதிய தொரு மக்கள் புரட்சிக்கும் வழிவகுத்துள்ளது.
ஒரு நாள் முன்னதாக அழைப்பு என்ற போதிலும் வர்த்தகர்கள் தாமாகவே வந்து கடைகளை பூட்டியும், தனியார் அரச பேருந்து உரிமையாளர்கள் அச்சுறுத்தல்களை மீறியும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந் தனர்.
இதனால் பாடசாலைகளும் அரச அலுவலகங்களும் செயலிழந்து காணப்பட்டன. எந்தவித குழப்பங்களும் இன்றியும் போராட்டம் நடைபெற்ற போதிலும் சில இடங்களில் தமிழரசு கட்சியின் அடாவடித்தனங்கள் நடைபெற்றிருந்தன.
விக்னேஸ்வரனே எங்கள் தலைவன்! என முதலமைச்சருக்காக யாழ். நல்லூர் முன்றலில் காலை 10 மணிக்கு கூடிய மக்கள் பெரு வெள்ளம் பேரெழுச்சியுடன் ஆர்ப்பரித்துள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர்கள் தலைவா, தலைமையை ஏற்றுக்கொள் என முதலமைச்சரை நோக்கி கோசம் எழுப்பினார்கள்.
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணையை அடுத்து இரு அமைச்சர்களையும் தாமாகவே விலகுமாறும் ஏனைய இரு அமைச்சர்களையும் இரு மாத விடுமுறையில் நிற்குமாறும்,
வடக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து, அவரை பதவியிலிருந்து தூக்கியெறியும் முயற்சியில் தமிழரசு கட்சி ஈடுபட்டிருந்தது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து 15 பேரினது கையொப்பங்களுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசு கட்சியின் உறுப்பினரும் வடமாகண சபை அவைத்தலைவரு மான சீ.வீ.கே.சிவஞானம் கையளித்திருந்தார்.
அரசோடு கூட்டு இணைந்த தமிழரசு கட்சியின் இந்த முடிவுகளுக்கு,
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எதிர்ப்பு வலுப்பெற்று வரும் நிலையில், தமிழ் மக்கள் பேரவை நேற்றைய தினம் வடக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஒரு நாளுக்கு முன்னதாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், மக்கள் தாங்களாகவே முன்வந்து பேராதரவை முதலமைச்சருக்கு வழங்கியுள்ளனர். இதே வேளை நேற்று முன்தினம் சமூக வலைத் தளங்கள் வாயிலாக ஆதரவை திரட்டிய இளைஞர் படையணி ஒன்று, வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தது. இந்த போராட்டத்தில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் திரண்டு முதலமைச்சருக்கு ஆதரவாகவும், தமிழரசு கட்சிக்கு எதிராகவும் குரல் எழுப்பியிருந்தனர்.  இந்த நிலையில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஹர்த்தால் பூரணமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் 
முதலமைச்சருக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தாலும் மாபெரும் கண்டனப் போராட்டமும் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதோடு, முதலமைச்சருக்கு ஆதரவாக விண்ணை பிளக்கும் வகையில் கோசங்களையும் எழுப்பியிருந்தனர். முன்னதாக காலை பத்து மணியளவில் நல்லூர் ஆலய முன்றில் ஆரம்பமாகிய போராட்டம் கோவில் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி,
முதலமைச்சர் வாசஸ்தலத்தை வந்தடைந்து அங்கு கூடினார்கள். இந்த போராட்டத்தில் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் ஒன்று திரண்டு விண்ணை பிளக்க கோசம் எழுப்பி தமிழர்களின் தலைவா நீதான் என கோரி யது அனைவரையும் புல்லரிக்க செய்தது.
இந்த போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள், ஊழியர் சங்கங்கள் மாணவர் ஒன்றியங்கள், மற்றும் பொது அமைப்புக்கள் ஆகிய பலதும் ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி போராடியிருந்தன.
இவ்வாறு பேரெழுச்சி கொண்ட  போராட்டமாக தமிழரசு கட்சிக்கு எதிரான போராட்டமான நேற்றைய போராட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்கள் நினைத்தால் எதனையும் எங்கேயும், எப்போதும் சாதித்து விடலாம் என்பது நேற்றைய போராட்டம் ஒரு எடுத்து காட்டாகும். மக்கள் என்னோடு இருக்கின்றார்கள் என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என முதலமைச்சரை துணிய வைத்த போராட்டமாகவும் நேற்றைய போராட்டம் அமைந் திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
முல்லைத்தீவு
வடக்கு முதல்வருக்கு  ஆதரவுக் கரம் நீட்டி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு  இடத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். அத்துடன் பாடசாலைகளில் மாணவர்கள் வரவின்றி வெறிச் சோடிக் காணப்பட்டது. ஆசிரியர்கள் அநேகம் பேர் சுகவீன விடுமுறையில் நின்றதன் காரணமாக பாடசாலைகள் நேர காலத்துடன் மூடப்பட்டது.
 அரச திணைக்களங்களும் பணியாளர்கள் வரவின்றி வெறிச் சோடிக்காணப்பட்டது. போக்குவரத்து சேவைகள் ஒரு சில அத்தியாவசிய சேவைகளைத் தவிர்ந்த ஏனைய  அனைத்து சேவைகளும் முற்றாக செயலிழந்து காணப்பட்டது. முல்லைத்தீவு நகரப் பகுதியில் உள்ள  அனைத்து வர்த்தக நிலையங்களும் காலை திறக்கப்பட்ட நிலையில்,  வர்த்க நிலையங்களுக்கு வந்த  இளைஞர்கள்  வர்த்தகர்களைச் சந்தித்து கலந்துரையாடி நடைபெறும்  போராட்டம் தொடர்பில் எடுத்து விளக்கியதை அடுத்து அனைத்து வர்த்தகர்களும் தமிழ் மக்களின் விடிவிற்காய் நீதிக்காகவும் அர்பணித்து சேவை ஆற்றி வரும் வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவாக குரல்களை தாங்கள் கொடுப்பதாக தெரிவித்து தமது வர்த்தக நிலையங்களை மூடி பூரண ஹர்த்தால் அனுஷ்டித்துள்ளனர்.
ஏ9 வீதியில் உள்ள மாங்குளம் நகரப் பகுதில் சில வர்த்தக நிலையங்களை காலையில் சில  வர்த்தகர்கள்  திறந்து வைத்திருந்த நிலையில், அங்கு வந்த  அந்த பிரதேச இளைஞர்கள் கதவடைப்பு போராட்டத்தின் மகிமை தொடர்பில் விளக்கம் அளித்ததையடுத்து வர்த்தகர்கள் தாங்களும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து வர்த்தக நிலையங்களை மூடி  ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். வவுனியாவில் இருந்து மல்லாவி நோக்கி பயணித்த தனியார் பேருந்து மாங்குளத்தில் வைத்து மீண்டும் வவுனியாவிற்கு இளைஞர்களால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி 
முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் நேற்றைய தினம் இயல்பு முடக்கல் நடைபெற்றதோடு, ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றிருந்தது. இந்த போராட்டத்தில் முதலமைச்சரே தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்க வேண்டும். தமிழரசு கட்சியே தமிழ் மக்களுடைய மனங்களுக்கு விரோதமாக செயற்படாதே, ஊழல் அமைச்சருக்களுக்கு ஆதரவளிக்காதே என்ற கோசங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தவிர கிளிநொச்சியிலும் தனியார் போக்குவரத்து சேவைகள் எவையும் நடைபெறாததோடு, வர்த்தக நிலையங்களையும் பூட்டி ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த ஆதரவால் கிளிநொச்சியிலும் முதலமைச்சருக்கான ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது. கிளிநொச்சி மக்கள் என்றுமே முத லமைச்சருக்கு ஆதரவாகதான் இருப்பர் என போராட்டத்தின் போது மக்கள் ஆர்ப்பரித்தனர்.
வவுனியா 
வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகின்ற நிலையிலும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக வவுனியா வர்த்தர்கள் தமது கடைகளை பூட்டி ஆதரவு தெரிவித்ததுடன் கண்டன போராட்டத்iயுதம் முன்னெடுத்திருந்தனர்.
எனினும் சில இடங்களில் மட்டும் வழமை மறுப்பு நடைபெறவில்லை. பேருந்துகள் சில சேவையில் ஈடுபட்ட போதிலும் அநேகமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வவுனியாவில் உள்ள பாடசாலைகள் அரச திணைக்களங்களில் மாணவர் மற்றும் அதிகாரிகளின் வரவு மிக மிக குறைவாக காணப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. மேலும் வடக்கு முதலமைச்சரை தமிழரசு கட்சி தொடந்தும் புறக்கணித்தால் அல்லது அவருக்கு எதிராக தொடந்தும் செயற்பாடுகளை சதி முயற்சிகளை முன்னெடுத்தால் முதலமைச்சருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடுவோம் என வவுனியா மக்கள் தாம் முன்னெடுத்த கண்டனப் போராட்டத்தில் தெரிவித்திருந்தனர்.
மன்னார் 
மன்னாரில் பொதுமக்கள் தமது இயல்பு நிலையை முடக்கியிருந்த போதிலும், வர்த்தகர்கள் வழமை போன்று செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது. இதற்கு காரணம் ஹர்த்தால் அழைப்பு விடுத்தது குறுகிய காலத்திலேயே என்பதே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் மன்னார் மக் கள் மாலை வேளை முதலமைச்சருக்கு எதிரான தமிழரசு கட்சியின் நடவடிக்கை குறித்தும், அதனை ஒட்டி வடக்கில் நடைபெறுகின்ற போராட்டங்கள் குறித்தும்,
அறிந்து கொண்ட மன்னார் மக்கள் முதலமைச்சருக்கு ஆதரவாகவே தாம் தொடந்தும் இருப்போம் என பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இதற்கு மன்னாரில் உள்ள பொது அமைப்புக்கள், மத அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் தமிழரசு கட்சி தொடந்தும் இவ்வாறு செயற்பட்டால் முதலமைச்சருக்கு ஆதரவாக வீதியில் இறங்கி போராட வேண்டியிருக்கும் என அறிவித்துள்ளனர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *