Tuesday, November 21, 2017

.
Breaking News

ஒரே ‘நைட்டில்’ சூப்பர் ஸ்டார் ஆனார் 81 வயது சீன தாத்தா!

ஒரே ‘நைட்டில்’ சூப்பர் ஸ்டார் ஆனார் 81 வயது சீன தாத்தா!

அதிஷ்டம் யாருக்கு எப்போ எங்க வரும்னு சொல்ல முடியாது. அப்படி வந்தால் ஒரே ‘நைட்’ல ஒபாமா தான். சீனாவின் சாதாரண மனிதராக வாழ்ந்து வந்த 81 வயது  முதியவரான வாங் டேஷன்னுக்கு திடீரென கிடைத்த ‘ஆடை வடிவமைப்பு’ நிகழ்ச்சி வாய்ப்பின் மூலமாக, இன்று மக்கள் மத்தியில் பெரிய சூப்பர் ஸ்டாராகி உள்ளார்.

சீனாவில் வசிக்கும் வாங் டேஷன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண மனிதராகத்தான் வாழ்க்கை நடத்தி வந்தார். திடீரென்று ஒரு ஆடை வடிவமைப்பாளரிடம் இருந்து அழைப்பு வந்தது.

வெண் தாடி, நீளமான தலைமுடியுடன் சட்டை அணியாமல் சில நிமிடங்கள் மாடல்கள் சூழ, “ஆடை வடிவமைப்பு” நிகழ்ச்சியில் நடந்து வந்தார். இவரின் உடல் அமைப்பை பார்த்து, பார்வையாளர்கள் பாராட்டியதோடு உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறார் என்றெல்லாம் தெரிந்துகொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டினர்.

அவ்வளவு தான், இப்போது விளம்பரங்கள் படங்கள், ஆடை வடிவமைப்பு நிகழ்சிகள், திரைப்படங்கள் என்று நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி போல பிரபலமாகி விட்டார். முதியவர்களைப் பற்றிய பார்வையையும் மாற்றியிருக்கிறார்.

இது பற்றி வாங் சொல்லும் போது “முதல் முறையாக சட்டையின்றி ஆடை வடிவமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, ஆபாசமாக வலம் வந்த குற்றத்துக்காக கைது செய்யப்படுவேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

மாறாக விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் வாய்ப்புகள் வந்து குவிந்துவிட்டன. திடீரென மக்கள் என்னை ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ஆக ஏற்றுக்கொண்டு விட்டனர். சீனாவிலும் வெளிநாடுகளிலும் இன்று அறியக்கூடிய மனிதனாக இருக்கிறேன். ‘சீனாவின் ஹாட்டஸ்ட் கிரான்ட்பா’ என்ற பட்டமும் கிடைத்துவிட்டது. புகழும் பணமும் பெருகிவிட்டது” என்று பெருமையோடு கூறியுள்ளார்.

ஆனாலும் இப்போதும் ‘ஒரு கிண்ணம் சாதமும் கொஞ்சம் டோஃபுவும் தான்’ என் உணவு. இயற்கை நம் வயதைத் தீர்மானிக்கிறது, நீங்கள்தான் மனநிலையைத் தீர்மானிக்கிறீர்கள் என்றார் கம்பீரத்தோடு.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *