Wednesday, November 22, 2017

.
Breaking News

சர்வதேச விசாரணை முதல்வர் விடாப்பிடி!

சர்வதேச விசாரணை முதல்வர் விடாப்பிடி!

இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்வ தேச விசாரணைக்கு பதிலீடாக நடத்தப்படு கின்ற எந்த விசாரணையையும் நாம் எச்சந் தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் களிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பின்னரான இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இலங்கை மீதான சர்வதேச விசாரணையில் தமிழ் மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடு போன்றவற் றினை அறிந்து கொள்வதற்கு அமெரிக்க செனட் சபையின் 6 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தி ற்கு விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது வடக்கு மாகாண முதல மைச்சரினை அவரது அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சந்தித்து கலந்துரை யாடியிருந்தனர்.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை என நாம் இறுதி வரை நம்பியிருந்தோம்.
ஆனால் சர்வதேசம் தனது நலன்களுக் காக இலங்கை மீதான சர்வதேச விசார ணையை மட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிக் கின்றது.
பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களினை கருத்தில்கொள்ளாமல் நாட்டின் அரசு மீதே சர்வதேசம் கரிசனை கொள்கின்றது.
சிலர் சர்வதேச விசாரணை நடந்து முடி ந்து விட்டதாக கூறுகின்றனர்.
சரி அதனை நாம் ஏற்றுக் கொள்கின் றோம் ஆனால் விசாரணையின் ஒரு பகு தியே நடந்து முடிந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாக்கு மூலங் களே சர்வதேச விசாரணையின் மூலம் பெறப்பட்டுள்ளது. மறுதரப்புகள் விசாரணை செய்யப்படவில்லை.
ஆகவே! நடந்து முடிந்த சர்வதேச விசா ரணை வெறும் அறிக்கைகளாகவே நடை பெற்று முடிந்துள்ளது. இது முழுமைப்படுத்த ப்பட்ட சர்வதேச விசாரணையாக மேற்கொள் ளப்பட வேண்டும் என செனட் உறுப்பினர்க ளிடம் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது சர்வதேச கண்காணிப்பின் கீழ் நடைபெறும் உள்ளக விசாரணைகளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? என செனட் உறுப்பினர்கள் வடக்கு முதலமைச்சரிடம் கேட்டனர்.
இலங்கை அரசினால் நடத்தப்படுகின்ற விசாரணையில் எமக்கு துளி கூட நம்பிக்கை யில்லை கடந்த காலங்களில் எமக்கு சிறந்த அனுபவமும் உள்ளது.
உள்ளக விசாரணையை நீதியாக நட த்துவதற்கு இலங்கையின் நீதித்துறை இடங் கொடுக்கப்போவதுமில்லை.
ஆகையால் எமக்கு முற்றுமுழுதான சர்வ தேச விசாரணையொன்றே இலங்கை மீது மேற்கொள்ள வேண்டும் உள்ளக பொறி முறையினை தமிழ் மக்களும் நாமும் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். இதனை சர்வ தேசமும் புரிந்து கொள்ள வேண்டும் என செனட் உறுப்பினர்களிடம் வடக்கு முதல மைச்சர் உறுதியாக கூறியிருந்தார்.

About The Author

Related posts