Tuesday, November 21, 2017

.
Breaking News

இதுவரை பூமியை வேற்றுகிரகவாசிகள் தொடர்பு கொள்ளாததன் உண்மையான காரணம் என்ன?

இதுவரை பூமியை வேற்றுகிரகவாசிகள் தொடர்பு கொள்ளாததன் உண்மையான காரணம் என்ன?
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு  பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள். இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர்.

வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர்கள் இணைந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள ’ரோடு- மேப்’ அமைந்துள்ளனர். அதன் வழியாக சக்தி வாய்ந்த அதிநவீன டெலஸ் கோப்புகளை நிறுவியுள்ளனர்.

20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளின் நிலையை கண்டறிய முடியும். ஜேம்ஸ் வெப் விண்வெளி டெலஸ் கோப் மற்றும் சக்தி வாய்ந்த உபகரணங்கள்  மூலம் இது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் கூறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
வருகிற 19 ந்தேதி திங்கட்கிழமை தங்கள் ஆய்வு முடிவுகள் குறித்து நாசா அறிவிக்க உள்ளது.

இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்றால் ஒரு வினோதமான கொள்கையின் படி மனித இனம் இன்னும் முன்னேற வில்லை என்றே ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாகவே கருதப்படுகிறது.

இந்த பிரபஞ்சம் 1.38 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நமது மனித முன்னோர்கள் தோன்றியதை கணக்கிட்டால் அந்த காலகட்டம்  பிரபஞ்சம் தோன்றிய காலகட்டத்தில் 0.36 சதவிகிதமேயாகும். அதிலும்  நவீன மனிதர்களை கணக்கிட்டால் அதிலும் மிககுறைவான கால அளவே எனவே பிரபஞ்சத்தை கணக்கிடும் போது மனித இனம்
இளமையானதே.

ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும் அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளைபோலவே தெரியலாம் என் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, வேற்றுகிரகவாசிகளை மனிதர்கள் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் உள்ளன என கணக்கிடப்பட்டு உள்ளது.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *