Thursday, June 22, 2017

.

இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டாள்! …. } -சங்கர சுப்பிரமணியன். 

இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டாள்! …. } -சங்கர சுப்பிரமணியன். 

நீர்சொரிந்த கண்களோடு அவளிருக்க

நெருங்கியிருந்த அவன் நிலைகுழைந்தான்
ஏனென்று கேட்ட அவனிடத்தே
உங்களைக் கெடுத்த பாவியென்றாள்
நீ என்ன பாவம் செய்தாயென்றான்
நீங்கள் மிகவும் நாகரிகமானவர் என்றாளவள்
இங்கே வந்திருப்பதை
நாகரிகம் என்கிறாயா என்றான்
பண்பின் சிகரம் நீங்கள் என்றாள்
ஏனென்று கேட்டதற்கோ
முதலில் என் நலன் விசாரிப்பீரென்றாள்
அப்படியா என்று கேட்டவனிடமோ
அன்பில் உங்களுக்கு ஈடில்லை என்றும் சொன்னாள்
அதற்கு அவள்சொன்ன காரணமோ
மென்மையாய் அளையுமவன் நடத்துவதென்றாள்
பின்னெதற்கு கண்ணில் கண்ணீரென்றான்
அதற்கோ அவள் ஊமையானாள்
சொல்லென்றான் கண்ணீரைத் துடைத்துவிட்டே
பலருக்கு உணவாகும் நான்
உங்களுக்கு உறவாக முடியலையே என்றாள்
இன்றே நீ என் மனைவியாகச் சம்மதமா என்றான்
முன்பைவிட அதிகமாக
அவன் மடியிலே முகம் புதைத்தழுதாள்
அழுதவளை அள்ளியெடுத்தே
கட்டியணைத்து ஆறுதல் சொன்னான்
கலங்காதே யோசித்து
பதில் சொல்லெனச்  சொல்லிச்சென்றான்
சிலநாட்கள் விட்டு திரும்ப வந்தான்
சிந்தை நொந்தே அவன் அழுதான்
நீர்சொரிந்தன அவன் கண்களின்று
அவன் கண்முன்னே அவளின்றில்லை
உயிரை மாய்த்தே
இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டாள்!
-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *