Tuesday, November 21, 2017

.
Breaking News

கைவிலங்கிட்டு…. } ஏலையா க.முருகதாசன்.

கைவிலங்கிட்டு…. } ஏலையா க.முருகதாசன்.

கனடாவில் ஒரு திருமண நிகழ்வு

மகிழ்வுடன் போயிருந்தேன் அழைப்பிதழ் கண்டு

குதூகலம் நிறைந்திருந்தது மண்டபத்தில்

விருந்தின் முடிவில் கைகழுவி வெளியே வந்த வேளை

தெரிகிறதா என்னை என விளித்தாள் ஒருத்தி

பார்வைகள் சங்கமிக்க இடியொன்று இறங்கியது என்னுள்

சாப்பிட்டுவிட்டு கைகழுவி விட்டீர்களா – அன்றும்

என்னையும் விருந்துண்டு கைகழுவி விட்டவர்தானே என்றவள்

தனியிடம் நோக்கி என்னை இழுத்துச் சென்றாள்-

காதலித்தவளை கைவிட்டுப் போனவர்தானே நீங்கள் என்றாள்

பேச மொழியில்லாது பேச எதுவுமில்லாது

கோழையாய் நின்றேன் சுகம் விசாரிக்கக்கூட நா எழவில்லை

யாகவி என அழைத்தாள் தலைதிருப்பி

கூட்டமாய் நின்றவர்களில் ஒருத்தி வேகமாய் வந்தாள்

யாரவள் என்றேன் உங்கள் மகள்தான் என்றாள்

கலைக்கவில்லையா என்றேன் நான,;

இல்லை என்றவள் காதலியாக மட்டுமல்ல

மனைவியாக ; உங்களை நினைத்து வாழ்ந்தேன்

வைராக்கியத்துடன் அவளைப் பெற்றெடுத்து வளர்த்தேன் என்றாள்

தாய் நோக்கி “அம்மா” என வந்தாள் யாகவி

இவர்தான் உன் அப்பா என்றாள் தன் மகளிடம்

“அப்பா” மெதுவாக குரல் வர கண்கள் நிறைய – அகலவிழி

திறந்து நெருப்பாய் நின்றாள் என்னையே உரித்து வைத்த மகள்

தாயும் மகளுமாய் சுட்டெரித்த நெருப்பில் – தலைகுனிந்து

பொசுங்கிப் பொசுங்கி கைவிலங்கிட்டு நின்றேன் நான்

ஏலையா க.முருகதாசன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *