Thursday, December 14, 2017

.
Breaking News

இருக்கிறாரா? – இரண்டே வாக்கியங்களில் ஒரு கதை!

இருக்கிறாரா? – இரண்டே வாக்கியங்களில் ஒரு கதை!

கோவிலில் நடக்கும் அபிசேகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குமார் தன் தாத்தாவிடம்
“கடவுள் இருக்கிறாரா?” என்று கேட்டதற்கு “இது என்ன கேள்வி? கடவுள் இருக்கத்தான்
செய்கிறார்” என்று முறைத்தபடியே பதில் சொன்னார் தாத்தா.

“ஆம்…ஆம் இருக்கத்தான் செய்கிறார், இல்லாவிட்டால் பால், தயிர், தேன், இளநீர், என்று
பலவற்றை தலையில் ஊற்றினாலும் எழுந்து ஓடிவிடாமல் இருக்கத்தானே செய்கிறார்”
என்று சொல்லி புன்னகைத்தான் குமார்.

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts