Thursday, December 14, 2017

.
Breaking News

நான் தேடும் காதலை எவர் காணக்கூடும்!

நான் தேடும் காதலை எவர் காணக்கூடும்!

நான் தேடும் காதலை
எவர் காணக்கூடும்
என் காதலின் சுவடுகளை
எப்படி உணர்த்தி
எதற்குள் அடக்கலாம்
என் காதல்
விதைக்கப்பட வேண்டியது
உன் பாதங்களின் கீழ்
என் இதயத்தின் கீழ்
நான் ஓர் அற்புதம்
நீ ஓர் அழகு
நாம் சந்திப்பதென்பது
விதிக்கப்பட்டது
சந்தித்தவேளை
இதயம் உன் பெயரை
இறுக அணைத்து
பச்சை குத்தியது
நீ அழகன் மட்டுமல்ல
அதைவிட ஓர் பேரழகு
இது காதலா கற்பனையா
நிலைக்குமா நீடிக்குமா
நீ எனக்கா இல்லையா
எதுபற்றியும் கவலையில்லை
என் காதலனே
காதலும் ஓர் போர்களமே
ஒரு கணமும் ஓயாமல்
காற்றோடு தூதுவிட்டு
உணர்வோடு போராடி
காதலில் காதலை கலப்பதுவும்
என்நிலை மறந்து
உன் வசம் ஆதலும்
உன் தாள் பணிந்து
உன்னில் நான் கரைதலும்
காதல் தேசத்தில்
ஜெய பேரிகை
என்றே பொருள் படும்
இனிமேல்
பேசுதற்கு என்ன உண்டு
என்னோடு நான் இல்லை
என்னைத் தொலைத்துவிட்டு
உன்னிடம் தேடுகின்றேன்
எனது வானமும் நீ
நான் வசிக்கும் கூடும் நீ
நாட்கள் நகர நகர
வரப்பு மீறி வளர்கிறது காதல்
மெய் தீண்டா நேரத்தில்
உயிர் தாண்டி வலிக்கிறது காதல்
நீ ஓர் சுகமான ஞாபகம்
உன்னைப் போற்றிப்பாட
என்னிடம் சொற்கள் ஏது
கவிதையின் சுவையே
உன் இனிய மொழிகள்
செவியில் விழும்போதே
உருவாகின்றது மெல்லிசை
கண்ணை மூடிக்கொண்டு
யாரைத் தரிசிக்கின்றாய்
கண்களைத் திறந்து பார்
நெஞ்சை உலுக்கும்
உன் இனிய கீதங்கள்
பிஞ்சுப் பூக்களிலும்
மெல்லச் சிரிப்பதை
பரந்த பூமியில்
நறுமணம் பரப்பும்
வெகுமதி உன்னை
மெய்வருந்தி
உருவாக்கியது யார்?
தினமும் அரங்கேறும்
மனிதச் சந்தையில்
பார்வைக்கு விட்டதை
எப்படி அபகரிப்பது?
என் உயிர் அன்பனே
புரியாத நிலையில்
அலை மோதும் எனக்கு
என்ன சொல்லப் போகிறாய்?
என் சுவாசம் இப்போ
எதற்காகவும் துடிப்பதில்லை
உன்னை மட்டும்
சுவாசித்து சுவாசித்து
ஓய்வெடுக்க நினைக்கிறது

சௌந்தரி கணேசன்.11393258_10153464293093984_7431617838472440228_n

About The Author

Related posts