Thursday, January 18, 2018

.
Breaking News

மணிவிழா காணும் டென்மார்க் தர்மா தர்மகுலசிங்கம் வயன் நகரில் விழா!

மணிவிழா காணும் டென்மார்க் தர்மா தர்மகுலசிங்கம் வயன் நகரில் விழா!

நான்கு கண்டங்களில் இருந்து பேராளர்கள் வருகை..

டென்மார்க்கின் சோசல் டெமக்கிரட்டி கட்சி வயன் நகரப்பிரிவின் முக்கிய உறுப்பினரும், உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளரும், இலக்கியவாதியுமான தர்மன் தருமகுலசிங்கம் அவர்களுடைய மணி விழா வரும் சனிக்கிழமை பகல் 11.00 மணிக்கு வயன் நகரத்தில் உள்ள கிம்நாசிய விழா மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.

இந்த விழா ஒரு மணிவிழாவாக மட்டுமன்றி அதை மேலும் செம்மைப்படுத்தி ஒரு முக்கியமான கலை இலக்கிய நிகழ்வாகவும் மாற்றியிருக்கிறார் தர்மா..

இதில் பங்கேற்பதற்கு இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, கனடா உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்து பேராளர்கள் டென்மார்க் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்றைய தினம் வைரவிழா நாயகன் தர்மன் தர்மகுலசிங்கம் என்று மகுடமிடப்பட்ட மணிவிழா மலரும் வெளியிடப்படுகிறது, இதில் உலகின் பலபாகங்களில் இருந்தும் அவரை அறிந்த நண்பர்கள், இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் நிறையவே எழுதியுள்ளனர்.

விழாவிற்கு ஆசிரியர் கி.செ.துரை தலைமைதாங்க வயன் நகர பாராளுமன்ற உறுப்பினர் ரோல்ஸ் ராவன் பிரதம விருந்தினராக பங்கேற்க பல்வேறு இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் புடைசூழ விழா பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

இந்த நிகழ்வில் பிரபல படைப்பாளி கோவிலூர் செல்வராஜன் எழுதிய ஊருக்கு திரும்பணும்

என்ற சிறுகதைத் தொகுப்பும், தற்போது லண்டனில் வாழ்ந்து வரும் பிரபல ஓவியர் ரீ. சௌந்தர் அவர்களுடைய தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் என்ற இரண்டு நூல்கள் வெளியீடு செய்யப்படவுள்ளன.

அதேபோல தர்மா எழுதிய கோ.சி.ஆனர்சன் கதைகளின் தமிழ் வடிவமும் இரண்டாவது பதிப்பாக வெளிவர இருக்கிறது.

தனது மணிவிழாவை சாதாரணமாக நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் நடத்தும் ஒரு விழாவாக குறுக்கிக்கொள்ளாமல் அதை ஓர் கலை இலக்கிய பெருவிழாவாகவும் மாற்றி, அதற்காக பெரும் பொருள் செலவழித்து முயற்சிகளை முன்னெடுத்துள்ள தர்மாவின் தன்னம்பிக்கை பயணத்தை வாழ்த்துவதல்லால், விமர்சிக்க இங்கு யாதொரு முகாந்திரமும் இல்லை.

முதலில் ஒரு காரியத்தை செய்து காட்டுகிறேன் என்று பல நிகழ்வுகளை நடத்தும் இடையறாத துணிச்சலே அவருடைய வெற்றியின் அடையாளமாக இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னதாக டென்மார்க்கில் ஒரு சிறந்த கலை இலக்கிய மணி விழாவுக்காக மீண்டும் வயன் நகரம் விழாக்கோலம் பூணுகிறது.

போவது அவசியம்..

வாழ்த்துவது முக்கியம்..

மற்றையோரும் இத்தகைய சிறப்புக்களை செய்யவும் சிறந்த தன்னம்பிக்கை பாதையில் செல்ல வழிகாட்டுவதும் நமது கடமையாகும்.

ஒவ்வொரு மனிதனுடைய மணி விழாவும் இதுபோல பதிவு பெற வேண்டும், வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும்..

புகழ் பூத்த இனமாக தமிழினம் தன்னை மாற்ற வேண்டும்..

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *