Thursday, June 22, 2017

.

அரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணைந்து செயற்படுகிறதா?

அரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணைந்து செயற்படுகிறதா?

பாரா­ளு­மன்றக் குழுக்­களின் பிரதித் தலை­வ­ராக பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரிவுசெய்­யப்­பட்­டுள்­ளமை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கொள்கை நிலைப்­பாட்டில் ஏற்பட்ட மாற்­ற­மே­யாகும் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சியின் தலை­வ­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.
இதன்­மூலம் அர­சாங்­கத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இணைந்து செயற்­ப­டு­கின்­றதா என்ற கேள்­வியும் அவர் எழுப்­பி­யுள்ளார்.

நேற்­றைய தினம் யாழில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

பாரா­ளு­மன்ற பிரதித் தலைவர் விவ­காரம் தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள பங்­காளிக் கட்­சி­க­ளுடன் கலந்­தா­லோ­சித்­தி­ருக்­க­வேண்டும். எனினும் அவ்­வாறு செய்­யப்­ப­டாமல் இருட்டில் வைத்தே பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­கைய செயற்­பாட்­டிற்கு கூட்­ட­மைப்பின் ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீது நம்­பிக்­கை­யில்­லாத தன்­மையா காரணம் எனக் கேள்வி எழுப்­பு­கிறேன்.

இதே­வேளை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரிவு செய்­யப்­பட்டால் பிரதிக் குழுக்­களின் தலைவர் பதவி விவ­காரம் அடங்­க­லாக இரண்டு பத­வி­க­ளுக்­கு­மி­டையே வேறு­பாடே காணப்­படும். எனவே இது தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புத் தலைமை தெளி­வு­ப­டுத்­த­வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஒரு வேலைத்­திட்டம் இருக்­கு­மாக இருந்தால் தான் எதிர்­கட்சி தலைவர் என்ன விட­யங்­களை செய்யப் போகின்றார் என்ற விட­யங்கள் தெளி­வாக இருக்கும்.

தற்­போது ஒரு குழப்­ப­க­ர­மான ஒரு சூழல் காணப்­ப­டு­கின்­றது. அதா­வது பாரா­ளு­மன்றில் ஒரு­வி­த­மான முடி­வு­களும் சர்­வ­தே­சத்தில் ஒரு வித­மான முடி­வு­களும் காணப்­ப­டு­கின்­றன.
இந்­நி­லையில் நாங்கள் எதை நோக்கிச் செல்­கின்றோம் என்ன நிலைப்­பாடு, என்ன வேலைத்­திட்டம் என்­பதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வாறு தயா­ரிக்­கப்­போ­கின்­றது என்ற கேள்­வியும் எழு­கின்­றன.

எங்­க­ளுக்கு பொறுப்­பான ஒரு பதவி கிடைக்­கின்ற போது அத­னூ­டாக தமிழ் மக்­க­ளி­னு­டைய உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மாக இருந்தால் அதற்கு நாங்கள் எதை நோக்கி போகின்றோம் என்­பதில் தெ ளிவு இருக்க வேண்டும் என்றார்

About The Author

Related posts