Tuesday, November 21, 2017

.
Breaking News

ஜீ தமிழில் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி – புத்தம் புதிய சீரியல்கள்

சென்னை: ஜீ தமிழ் டிவியில் இன்று முதல் புதிய நெடுந்தொடர்களான “பூவே பூச்சூட வா” மற்றும் “யாரடி நீ மோகினி” ஆகியவை முறையே இரவு 8 மணி முதல் 8:30 மணி வரையும், இரவு 8:30 மணி முதல் 9 மணி வரையும், திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளது. இன்றுமுதல் பிரபல சீரியல்கள், டாக் ஷோ நிகழ்சிகளின் நேரமும் மாறுகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது நேயர்களின் வசதிக்கேற்ப, நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புது சீரியல்கள் ஏப்ரல் 24 முதல் புதிய நெடுந்தொடர்களான “பூவே பூச்சூட வா” மற்றும் “யாரடி நீ மோகினி” ஆகியவை முறையே இரவு 8 மணி முதல் 8:30 மணி வரையும், இரவு 8:30 மணி முதல் 9 மணி வரையும், திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளது.

மென்மையான காதல் ஜீ தமிழ் தொலைக்காட்சி, தரமான நிகழ்ச்சிகளை அளித்து, முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரண்டு புதிய நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன. இம்மாதம் 24ஆம் தேதி முதல், காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த “பூவே பூச்சூடவா” என்ற தொடர் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


பூவே பூச்சூடவா:

பூவே பூச்சூடவா, அதிகாலையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து காபியைப் பருகுவது போன்ற இதமான காதல் கதை. சாதாரண பஸ் கண்டக்டரின் மகளான சக்தி படிப்பை முடித்துவிட்டு தன் அம்மா நடத்தும் கேட்டரிங் சர்வீஸுக்கு உதவியாக இருக்கிறாள். ரொம்பவும் துருதுருவென ஓடி ஆடும் சக்தி மனதில் பட்டதை வெடுக்கென்று பேசும் குணம் கொண்டவள்.

சக்தி, சிவா காதல்
ஒரு விபத்தில் சக்தி சிவாவை சந்திக்கிறாள். வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவில் தொழில் தொடங்க நினைக்கும் சிவா கோப சுபாவம் கொண்டவன். யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பழகிவிட மாட்டான். குறிப்பாக பெண்கள் என்றாலே சிவாவிற்கு வெறுப்பு. விபத்தில் சிவாவும், சக்தியும் மோதிக்கொள்வதில் ஆரம்பித்து, எப்படி காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது தான் கதை.

பிரபல நட்சத்திரங்கள் சக்தியாக டான்ஸ் ஜோடி டான்ஸில் கலந்துகொண்டு கலக்கிய ரேஷ்மா, சிவாவாக மிஸ்டர் & மிஸ்ஸஸ் கில்லாடிகளில் கலந்து கொண்ட தினேஷும் நடிக்கிறார்கள். தினேஷ் நடிகை ரக்‌ஷிதாவின் கணவர். ரேஷ்மாவின் அம்மாவாக உமா பத்மநாபனும் அப்பாவாக ஏ.எல். ராஜாவும் நடிக்கிறார்கள். தினேஷின் அம்மாவாக யுவராணியும் அப்பாவாக மது மோகனும், பாட்டியாக சி.ஐ.டி. சகுந்தலாவும், தம்பியாக அஞ்சரைப் பெட்டி தொகுப்பாளர் மதனும் நடிக்கிறார்கள்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *