Thursday, January 18, 2018

.
Breaking News

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யன நிரூபிக்க வடக்குக் கிழக்கு மக்கள்தான் ஒரே சாட்சி !

இலங்கை இராணுவத்தின் மீதான யுத்த குற்றச்சாட்டுகள் சர்வதேச மட்டத்தில் பலமடைந்து வருகின்றதை நாம் நன்கு அறிவோம். எனினும் எம்மீதான போர்க் குற்றச்சாட்டுகளை பொய்யென நிரூபிப்பதற்கு எமக்கு வடக்கு கிழக்கு மக்களே ஒரே சாட்சியாகும் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறும் சர்வ தேச பாதுகாப்பு மாநாட்டின் பின்னர் இராணுவத்தின் மீது எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு விடை கிடை க்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தினால் நேற்று முன்தினம் கொழும்பில் நடத்தப் பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரி விக்கையில்;;;;;,
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப் பட்டதில் இருந்து தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் இல ங்கை பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்படும் சர்வதேச பாதுகாப்பு மாநாடு இம்முறையும் செப்டெம்பர் மாதம் முதலாம் இரண்டாம் திகதி களில் கொழும்பில் நடைபெறவு ள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்குபற்றலில் இம்முறையும் இந்த பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
மேலும் இலங்கை இராணு வம் யுத்த குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதை பல தட வைகள் வெளிப்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் இலங்கை இராணுவத்தினால் நடத்தப்படும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டின் போதும் இந்த விடயம் நிரூபிக்க ப்பட்டுள்ளது. யுத்த காலகட்டம் எவ்வாறு என்பதை விபரிக்க முடி யாது. ஆனால் யுத்தம் முடிவடை ந்ததில் இருந்து இன்று வரையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இராணுவத்தின் செயற்பாடுகள் மிகவும் நேர்த்தியாகவும் மக்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்க ளுக்கு உதவும் வகையிலுமே அமையப்பெற்றுள்ளது.
எனினும் எம்மீதான யுத்த குற்றச்சாட்டுகள் சர்வதேச மட்டத் தில் இன்னமும் தலை தூக்கியுள் ளதை நாம் நன்கு அறிவோம். ஆனால் இந்த கேள்விகளுக்கான பதிலை வடக்கு கிழக்கு மக்களிடம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். எமக்கு இருக்கும் நல்லதொரு சாட்சியாக வடக்கு கிழக்கு மக்களே உள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தொட க்கம் இன்றுவரையில் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினால் கையாளப்படும் செயற்பாடுகள் அப்பகுதி மக்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே எமக்கு இருக் கும் நல்லதொரு சாட்சி அப்பகுதி மக் களேயாவர்.
அதேபோல் நாம் நடத்தும் சர் வதேச பாதுகாப்பு மாநாட்டி னூடாக எம்மீதான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கான வாய்ப்புகள் அதி கமாக உள்ளதாக நாம் நம்புகி ன்றோம். கடந்த காலங்களை விடவும் இம்முறை எமது பாது காப்பு மாநாட்டில் பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை அதிக ரித்து வருகின்றது. அதேபோல் சர்வதேச மட்டத்தில் எம்மீதான நம்பிக்கையும் அதிகரித்து வரு கின்றது. எனினும் சர்வதேச மட்ட த்தில் எழும் எம்மீதான குற்றச் சாட்டுகளை பொய் என நிரூபிக்க இந்த பாதுகாப்பு மாநாடு நல்ல தொரு வாய்ப்பாக அமையும். அதேபோல் எம்மீது எழுப்பப்படும் பலவிதமான விமர்சனங்களுக் கும் கேள்விகளுக்கும் இந்த மாநா ட்டின் பின்னர் விடை கிடைக்கும்.
மேலும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் விசேட பிரதிநிதிகள் இம்முறை எமது பாதுகாப்பு மாநா ட்டில் கலந்து கொள்வதால் இல ங்கையின் நிலைமைகளை வெளி ப்படுத்த நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும். ஆகவே எமக்கு எமது உண்மையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

About The Author

Related posts