Tuesday, October 24, 2017

.
Breaking News

65 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் !

ஜெர்மனியில் உள்ள சாரா ஐகோர்ஸ்தி பகுதியை சேர்ந்த 65 வயதான பெண் ஆனிகிரீட்ரவுனிக். இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் ஆனிகிரீட் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார், அவரை ஸ்கேன் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதை அறிந்ததும் ஆனிகிரீட் ஆச்சரியம் அடைந்தார். அவர் போதிய உடல் நலத்துடன் இருந்ததால் 4 குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

அவரை டாக்டர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கவனித்தனர். தேவையான மருந்து மாத்திரைகள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு வகைகளையும் சாப்பிட ஆலோசனை கூறினார்கள்.

4 குழந்தைகளும் வயிற்றில் ஆரோக்கியமாக வளர்வதை டாக்டர்கள் கண்காணித்தனர்.

இந்த நிலையில் குழந்தைகள் போதிய வளர்ச்சி அடைந்ததும் அவருக்கு சிசேரியன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி சிசேரியன் மூலம் 4 குழந்தைகளையும் ஆனிகிரீட் பெற்றெடுத்தார். ஒவ்வொரு குழந்தைகளும் 2¼ கிலோ எடை கொண்டதாக இருந்தன. பிறந்ததும் 2 குழந்தைகளுக்கு மூச்சு திணறல் இருந்தது. அந்த குழந்தைகள் வென்டிலேட்டர் உதவியுடன் குணப்படுத்தப்பட்டன. 2 குழந்தைகளுக்கு சர்ஜரி செய்யப்பட்டது. டாக்டர்கள் அதிக சிரத்தை எடுத்து இந்த சிசேரியன் சிகிச்சையை மேற்கொண்டனர்.

ஆனிகிரீக்குக்கு ஏற்கனவே 10 வயது முதல் 44 வயது வரையுள்ள பிள்ளைகள் உள்ளன. அவர்களில் சிலருக்கு திருமணமாகி 7 பேரக்குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் அவர் 4 குழந்தைகளை பெற்றெடுத்தது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

About The Author

Related posts