Tuesday, November 21, 2017

.
Breaking News

காதுக்குள் 29 குஞ்சுகளை பொறித்த கரப்பான் பூச்சி:

மெல்போர்ன் நகரில் ஒருவரது காதில் 29 கரப்பான் பூச்சி குஞ்சுகள் பொறித்த நிலையில் உள்ளதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

லீ (19 ). இவர் தினமும் இரவு காது வலியால் அவதிப்பட்டு வந்தார். வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு எண்டோஸ்கோபி செய்து பரிசோதித்தனர் மருத்துவர்கள்.

இதில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். வலது பக்க காதில் கரப்பான் பூச்சி ஒரு வாரமாக இருந்துள்ளது. பின்னர் அங்கு முட்டையிட்டு 29 குஞ்சுகள் பொறித்துள்ள கரப்பான் பூச்சியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர்.

தற்போது லீ நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

About The Author

Related posts