Saturday, February 24, 2018

.
Breaking News

பெருமதிப்புக்குரிய திரு. நக்கீரரே! தங்களின் களத்தில் ஓரு கண்ணுக்குட்டி உளத்தை உருக்கும் கவிதையாக உள்ளது!

பெருமதிப்புக்குரிய திரு. நக்கீரரே!    தங்களின் களத்தில் ஓரு கண்ணுக்குட்டி உளத்தை உருக்கும் கவிதையாக உள்ளது!

நீறாகிய பெருங்கனல் மீண்டும் நெஞ்சில்தோன்றி,

ஊறுபடுத்தும்படி வரிகள் உயிர்த்து மனநிலத்தில் ஊரும்படி கவிபடைக்கும் வல்லமை உமக்கே வாய்த்த சொல்லமைப்பாம்! இக்காலத்தில் புலதில் இளையபரம்பரை உம்போல ஒருவரை நான் அறியவைத்த பாக்கியம் அளவிடற்கரிய ஆனந்தமாம்!

சீறும் கேள்விக் கணைகளைச் சினந்து கேட்கும் புதுமையான். ஏறுபோன்ற வரிகளால் எண்ணம் கீறி எழுகவே பாடுகவி யாப்பவன், சீரிய கருத்துக்குரியவன் நக்கீரன் நீர் நீடு நலமே வாழியவே!

நிர்வாணப் பிணைங்களைப் புரட்டிப்புரட்டித் தன்பற்களைத் தேடும் புத்தனைக் காணவைத்தீர்!

எத்துணை அரிய ஒப்புவமை!

நித்தமும் நாம் அறியும் நிதர்சனத்தை நீர்

தந்த வரிகளால் செஞ்சில் நிரந்தரமாய் பதியவைத்தீர்!

பிரதியெடுத்துப் பக்குவமாய் இக்கவியை வைத்துள்ளேன்!

நன்றி வணக்கம்! கிருஸ்ணசிங்கம்.

About The Author

Related posts