Tuesday, November 21, 2017

.
Breaking News

பத்தும் செய்வோமெனும் பத்துவரிக் கவிதை!

பத்தும் செய்வோமெனும் பத்துவரிக் கவிதை!

ஒன்றாக இணைந்து நல்வாழ்வு வாழவேண்டும்
இரண்டு உள்ளங்கள் நன்றாய் புரிதல் வேண்டும்
மூன்றாமவரை இல்வாழ்வில் தவிர்த்தல் வேண்டும்
நான்கே பேர் உறவென்று நின்றால் கூடப் போதும்
ஐந்தாம்படை வேலை செய்வோர் உறவு வேண்டாம்
ஆறுசுவை உணவை வறியவருக்கும் நாம் ஈவோம்
ஏழொலி இன்னிசை விருந்தும் நாம் கொடுப்போம்
எட்டு திசையிருந்தும் வருபவரை வரவேற்றிடுவோம்
ஒன்பது வகை தானியமும் கொடுத்து உபசரிப்போம்
பத்து பேரையாவது வாழவைத்தோமென மகிழ்வோம்!

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts