Monday, October 23, 2017

.
Breaking News

பாகிஸ்தானில் 300 குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்த 14 பேர் கைது

பாகிஸ்தானில்  300 குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்த 14 பேர் கைது

பாகிஸ்தானில் சுமார் 300 குழந்தைகளை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்த 14 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக உயர்மட்ட நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கசூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய கொடூரச்சம்பவம் வெளியாகியுள்ளது.

21 வக்கிரப்புத்தியாளர்களை கொண்ட ஒரு கும்பல், இங்குள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை சீரழித்து தங்களுக்கு ஏற்றவாறு புகைப்படம் மற்றும் வீடியோக்களை தயாரித்துள்ளது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்கள் சர்வதேச அளவில் அதிகஅளவில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள்தான் இந்த கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர்.

சில சிறுவர் மற்றும் சிறுமிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி இத்த கொடூரக்கும்பல் நீலப்படங்களை தயாரித்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்திவரும் பாகிஸ்தான் போலீசார் சுமார் 14 பேரை கைது செய்து உள்ளனர் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

About The Author

Related posts