Thursday, December 14, 2017

.
Breaking News

தயாநிதி மாறன் முன்ஜாமீன் ரத்து

தயாநிதி மாறன் முன்ஜாமீன் ரத்து

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் அவர் சிபிஐ முன்பு சரண் அடைய வேண்டும் என்று நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டில் தனி தொலைபேசி இணைப்பகத்தை ஏற்படுத்தி சன் டிவிக்கு பயன்படுத்தினார் என்றும் இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் நீதிபதி சுப்பையா முன்னாள் மத்திய அமைச்சர் மாறனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவருடைய முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியாதன் அவரது முன்ஜாமீனை ரத்து செய்ததுடன் 3 நாட்களுக்குள் அவர் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

About The Author

Related posts