Thursday, January 18, 2018

.
Breaking News

டக்ளஸிடம் Dr.சிவசங்கர் பெற்றார் 10 லட்சம்

டக்ளஸிடம் Dr.சிவசங்கர் பெற்றார் 10 லட்சம்

ஐக்கியதேசியக் கட்சியின் உடுவில் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தூயநீருக்கான அமையத்தின் தலைவரும் வைத்தியருமான சிவசங்கர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தாவிடம் கட்சிக் கொள்கைகளுக்கு மாறாக 10 இலட்சம் ரூபாவை தனது தேர்தல் செலவீனங்களுக்காகப் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் எமது கட்சிக் கொள்கைகளிலிருந்து மாறியமையால் அவரை இந்தத் தேர்தலில் நாம் நிராகரித்துள்ளோம்.

– இவ்வாறு நேற்று சுன்னாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஐ.தே.கவின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மகளிர் விவகார பிரதி அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சுன்னாகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சுன்னாகம் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.தே.க. ஆதரவாளர்கள் எமது தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சங்கர் ஏன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவரை உரையாற்றுவதற்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை என்று டே;கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே கலாவால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளரான வைத்தியர் சங்கர், அரசியல் கலப்பில்லலாத தூய நீருக்கான அமையம் என்ற பெயரில் ஒன்றை ஆரம்பித்து, பின் அதனைப் பயன்படுத்தி ஐ.தே.கவில் இணைந்து அமைச்சுப்பதவி கிடைக்கும் என்ற பதவிமோகத்தால் ஐ.தே.கவில் வேட்பாளராகக் குதித்தார். இவருக்கும் ஐ.தே.கவின் அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமாகிய கலா அக்காவுக்குமிடையில் முறுகல்நிலை முற்றியது. கலாவின் ஆதரவாளர்களால் இவரது அலுவலகமும் உடைக்கப்பட்டதும் தெரிந்தவையே!.

ஆனால், தற்போது கலாவுக்கு எதிராகச் செயற்படும் ஐ.தே.கவில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட துவாரகேஸ்வரனுக்கும் சங்கருக்குமிடையில் நெருக்கமான உறவு உள்ளதாகவும் துவாரகேஸ்வரனின் உதவியுடனேயே சங்கர் டக்ளஸிடம் 10 லட்சம் ரூபா பணத்தைப் பெற்றார் என்றும் நேற்றைய கூட்டத்தில் தனது சுன்னாகம் ஆதரவாளர்களுக்குக் கலாவால் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரியவர் ஒருவர் கலாவிடம் கேட்டார், டக்ளஸ் ஏன், எதற்காக வைத்தியர் சங்கருக்குப் பணம் கொடுக்கவேண்டும். அவர் தற்போது அமைச்சராகவும் இல்லை. அவர் வழமைபோன்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டமையும் கிடையாது. அவரே தனது கட்சியைக் கொண்டியக்கப் பெரும் பாடுபடுகின்ற இந்த நேரத்தில் வைத்தியர் சங்கருக்கு எவ்வாறு பணங்;கொடுத்தார். அதனால் அவருக்குக் கிடைக்கப்போகும் இலாபந்தான் என்ன? என்ற வினாவைத் தொடுத்தார்.

அதற்குப் பதிலளித்த கலா, தான் அரசியலில் பிரவேசித்த காலத்தில் இருந்து டக்ளசுக்கு எதிராகத்தான் செயற்பட்டு வருகின்றேன். என்னுடைய கணவரைக் கொலை செய்தது குருநகரைச் சேர்;ந்த டக்ளஸின் பாதுகாவலர். அதனால் நான் நாடாளுமன்றத்திலும் சரி இங்கு எமது மக்கள் மத்தியிலும் சரி அவரை தாக்கி அழிப்பதிலேயேதான் குறியாக உள்ளேன். இதனால், இந்தத் தேர்தலில் என்னைப் பலவீனப்படுத்துவதற்காகவும் எனது கட்சிக்குக் கிடைக்கவிருந்த ஓர் ஆசனத்தையும் கிடைக்காமல் செய்வதற்காகவும் டக்ளஸ் கொள்கை, கேட்பாடுகள், அரசியல் அனுபவம் எதுவும் இல்லாத வைத்தியர் சங்கரை 10 இலட்சம் ரூபாவுக்கு வாங்கியுள்ளார். – என்றார்.

நேற்றைய கூட்டத்தில் துவாரகேஸ்வரன் வந்து கூட்டத்தின் வெளியில் நின்று பார்வையிட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் அவர் சங்கரின் அலுவலகத்தில் சென்று அவருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலாவுக்கு எதிராக என்ன திட்டம் தீட்டப்பட்டதோ என்று வீதியால் சென்ற பல வழிப்போக்கர்களும் தமக்குள்ளே பேசிக்கொண்டனர்.

About The Author

Related posts