Tuesday, October 24, 2017

.
Breaking News

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்துவது சாத்தியம்

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்துவது சாத்தியம்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல தரப் பில் இருந்தும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை ஒரே சமயத்தில் அமல்படுத்துவது சாத்தியம் இல்லாதது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.தமிழ்நாட்டில் தற்போ துள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகே மது விலக்கை எப்படி அமல்படுத்துவது என்பதை தீர்மானிக்க வேண்டும்.

மது விலக்கை படிப் படியாக அமல்படுத்தலாம் என்பது எனது கருத்தாகும். முதல் கட்டமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்விக் கூடங்கள் அருகில் உள்ள மதுக்கடைகளையும், வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள மதுக் கடைகளையும் மூடலாம். அதன்பிறகு மற்றப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை கொஞ்சம், கொஞ்சமாக மூடலாம்.
இந்த விவகாரத்தில் ஒரே நாளில் மதுக்கடைகளை மூடச் செய்து சாதித்து விட முடியாது. கொஞ்சம், கொஞ்சமாக மதுக்கடைகளை மூடுவதே நல்லது.
அண்டை மாநிலமான கேரளாவில் இப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக மதுக் கடைகளை மூடி உள்ளனர். கேரளா அமல்படுத்தியதை தமிழ்நாட்டில் ஏன் செயல் படுத்த முடியாது? .

About The Author

Related posts