Thursday, January 18, 2018

.
Breaking News

கஜேந்திரகுமார் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருபவர்

கஜேந்திரகுமார் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருபவர்

கஜேந்­திரகுமாரை தோற்கடிக்கவே சம்பந்தன் ‘சமஷ்டியை’ கையிலெடுத்துள்ளார் – தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் சமஷ்டி முறை­மையில் தீர்வு என்று குறிப்­பிட்­டதன் மூலம் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் பெரும் தவ­றி­ழைத்­துள்ளார். கஜேந்­திரகுமார் பொன்­னம்­ப­லத்தை தோற்­க­டிக்­கவே அவர் இவ்­வாறு செய்­துள்ளார் என்று மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

கஜேந்­திரகுமாரின் கொள்­கை­களை நான் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ஒரே கொள்­கையில் தொடர்ச்­சி­யாக இருந்து வரு­கின்றார். எனினும் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்­வப்­போது கூட்­ட­மைப்பின் அர­சியல் எதிர்­காலம் கருதி நிலைப்­பா­டு­களை மாற்­றி­வ­ரு­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் சமஷ்டி விட­ய­தானம் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முக்­கி­யஸ்தர் தினேஷ் குண­வர்த்­தன மேலும் குறிப்­பி­டு­கையில்…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் சமஷ்டி முறை­மை­யி­லேயே தீர்வு என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதா­வது கூட்­ட­மைப்பின் தலைவர் தீர்வு விடயத்தில் ஒரு கடும்­போக்­கான கட்­டத்­துக்கு சென்­றுள்ளார். இதன் மூலம் அவர் பெருந் தவ­றி­ழைத்­துள்ளார் என்­ப­தனை குறிப்­பி­டு­கின்றேன். குறிப்­பாக இவ்­வாறு கடும்­போக்­கு­வா­தத்தை பின்­பற்றி இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாது. குறிப்­பாக பெரும்­பான்மை மக்­களின் சம்­ம­த­மின்றி எந்தத் தீர்­வையும் இலங்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது. இந்­நி­லையில் சம்பந்தன் சமஷ்டி என்ற விட­யத்தை குறிப்­பிட்­ட­வுடன் தென்­னி­லங்கை மக்கள் எதிர்க்­கின்­றனர். இவ்­வாறு தென்­னி­லங்­கையில் எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் மக்­களின் வாக்­கு­களை பெறு­வ­தற்­கா­கவும்,

தேர்­தலில் தனித்து ஒரே கொள்­கை­யுடன் கள­மி­றங்­கி­யுள்ள கஜேந்­திரகுமார் பொன்­னம்­ப­லத்தை தோற்­க­டிக்­க­வுமே சம்பந்தன் இந்த சமஷ்டி என்ற கடும்­போக்கு நிலைப்­பாட்டை எடுத்­துள்ளார். சம்பந்தன் அடிக்­கடி தமது நிலைப்­பா­டு­களை கூட்­ட­மைப்­புக்­காக மாற்­றிக்­கொண்­டி­ருக்­கின்றார். கஜேந்­திரகுமாரின் கொள்­கை­களை நான் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றார். எனினும் கூட்ட மைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வப் போது கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கருதி நிலைப்பாடுகளை மாற்றி வருகின்றார் என்றார்.

About The Author

Related posts