Tuesday, November 21, 2017

.
Breaking News

யாகூப் மேமன் காலை 6.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்!

யாகூப் மேமன் காலை 6.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்!

மும்பை குண்டு வெடிப்பில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு, நாக்பூர் சிறையில் இன்று(30-07-15) காலை துாக்கு தண்டனையை நிறைவேற்ற, அனைத்து ஏற்பாடுகளையும் சிறை துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்நிலையில், யாகூப்பின் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை அவர்களது இல்லத்தில் நேற்று (29-07-15) நள்ளிரவில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அபெக்ஸ் கோர்ட்டின் வழிகாட்டுதல்படி, யாகூபின் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, குறைந்தபட்சம் 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரினர். இந்த மனு மீதான பரிசீலனை, சுப்ரீம் கோர்ட் எண்:4ல் வைத்து விசாரிக்கப்பட்டது

யாகூப் தரப்பினர் வாதம் : யாகூப் மேமன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், நேற்று(29-07-15) கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், தூக்கு தண்டனையை 14 நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், குறுகிய காலத்தில் மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். கருணை மனு நிராகரிப்பு உத்தரவு நகலை பெற குற்றவாளிக்கு உரிமை உண்டு எனவும் வாதிட்டார்.

அரசு வக்கீலின் வாதம் : அரசு வக்கீல் முகுல் ரோகித்கி, சட்ட நடைமுறையை நேர்மையற்ற முறையில் மேமன் பயன்படுத்துவதாகவும், தண்டனையை இழுத்தடித்து சிறையிலேயே இருக்க மேமன் முயற்சிப்பதாகவும் வாதிட்டார்.

நள்ளிரவு 3.20 மணிக்கு துவங்கிய விசாரணை, 2 மணி நேரம் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், இரதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் அடங்கிய பெஞ்ச், அதிகாலை 5 மணியளவில் யாகூப்பின் மனுவை நிராகரித்தனர். இந்திய வரலாற்றில், அதிகாலை 2 மணிக்கு இதுவரை சுப்ரீம் கோர்ட் திறக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மேமனின் துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து நாக்பூர் சிறையில், துாக்கு நிறைவேற்றுவதற்கான பணிகள் துவங்கின. மருத்துவ பரிசோதனைக்குப்பின் காலை 6.30 மணிக்கு நாக்பூர் சிறையில் யாகூப் மேமன் துாக்கிலிடப்பட்டார்

About The Author

Related posts