Thursday, December 14, 2017

.
Breaking News

பெருமளவான போதைப்பொருட்கள் யாழ்ப்பாணத்தில் சிக்கின!

பெருமளவான போதைப்பொருட்கள் யாழ்ப்பாணத்தில்  சிக்கின!

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில் பெருமளவான போதைப் பொருட்கள் யாழ்.நகரில் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்.யு.கே.வூட்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸாரின் பிரதான நோக்கம் சிறுவர்களை துஷ்பிரயோகங்களில் இருந்து மீட்பதே ஆகும்.அதன் காரணமாக பாடசாலைகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதன் விளைவாக பொது மக்களால் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கு பொலிஸ் திணை க்களத்தின் ஊடாக மக்களுக்கு நன்றி கூறுகின்றோம்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளையின்படி யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,பிரதான பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து நேற்றைய தினம் காலை 9 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெருமளவான தடை செய்யப்பட்ட 10 புகையிலை பொதிகளும் மற்றும் கஞ்சா கலப்படம் செய்யப்பட்ட பாக்கு உள்ளடக்கப்பட்ட 12 பெட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். கைது செய்யப்பட்ட வருடன் இந்த விற்பனை தொடர்பாக தொடர்பில் இருப்பவர்களை மிக விரைவில் கைது செய்யவுள்ளோம்.

தொடர்ச்சியாக பொதுமக்கள் எமக்கு இவ்வாறான தகவல்களை வழங்கும் பட்சத்தில் யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தி சிறு வர்களையும் பாதுகாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

About The Author

Related posts