Sunday, February 18, 2018

.

தொழில் வளர்ச்சிக்கு உதவுமாறு

தொழில் வளர்ச்சிக்கு உதவுமாறு

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பாணர்ஜி 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று ஞாயிற்றுகிழமை இங்கிலாந்துக்கு வெளிநாட்டுப்பயணம் ஒன்றை மேற்க்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின்போது பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவை சந்திக்கும் மம்தா, அந்நாட்டின் முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து மேற்கு வங்காளம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வார் என தெரிகிறது.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை சுமார் 10 மணியளவில் விமானத்தில் புறப்பட்ட மம்தா பாணர்ஜி, தனது இங்கிலாந்து பயணம் பற்றி ஊடவியலளார்களுக்கு கருத்து தெரிவித்த போது, மேற்கு வங்காளத்துக்கு அதிக முதலீட்டை திரட்டும் நோக்கத்திலான இந்த பயணத்தின்போது இங்கிலாந்து தொழிலதிபர்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

About The Author

Related posts