Saturday, November 18, 2017

.
Breaking News

முன்னாள் பிரதமர் ரட்ணசிறியின் வீடு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு!

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவின் இல்லம் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் காலமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க அரசாங்க உத்தியோகபூர்வ இல்லமொன்றை பயன்படுத்தி வந்தார். அவரது மறைவின் பின்னர் அந்த இல்லத்தை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவில்லை. கொழும்பில் வீடமைப்பு திட்டமொன்றின் மூன்றாம் மாடியில் சிறிய இல்லமொன்றிலேயே சம்பந்தன் தங்கியிருக்கின்றார்.
இது தொடர்பில் பல தடவைகள் ஏற்கெனவே ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிட த்தக்கது.இந்த நிலையில் அண்மையில் காலமான முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தை சம்பந்தனுக்கு அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About The Author

Related posts