Sunday, January 21, 2018

.
Breaking News

கல் தோன்றி முன் தோன்றாக் காலத்துக் குடி தமிழன்தானே”

கல் தோன்றி முன் தோன்றாக் காலத்துக் குடி தமிழன்தானே”

கிரேக்கத்தை (Greece) உலக நாகரிகத்தின் தொட்டில் என்பார்கள். “நீயெல்லாம் ஒரு தமிழச்சியா? கல் தோன்றி முன் தோன்றாக் காலத்துக் குடி தமிழன்தானே” என்று முனுப்புக் கேட்கிறது. பொறுங்களேன். அதுதான் சொன்னேனே கொஞ்சம் பொறுமை என்று. முதலில் புகழ் வாய்ந்த சில கிரேக்கர்களின் பட்டியலைப் போடுகிறேன். அப்புறம் மனித குலத்துக்கு அவர்களின் கொடை (contribution) என்ன என்று பார்க்கலாம்.

1. சாக்ரடீஸ் 2. பிளேட்டோ 3.அரிஸ்ட்டாட்டில் 4.அலெக்சாண்டர்
5.ஹோமர் 6.பெரீக்லஸ் 7.லியோனிடாஸ் 8.ஆர்க்கிமிடீஸ் 9.பித்தக்கோரஸ் 10.ஹிப்போக்ரைடீஸ் 11. ஸொலோன்
12. ஹெரொடோட்டஸ் 13.த்யூசிடிடீஸ் & ப்ளூடார்க்14.ஈசாப் 15.சோஃபோக்லீஸ் 16.யூரிப்பிடீஸ் 17. டெமாஸ்தனீஸ் .
இன்றைக்குப் பட்டியலில் இருந்து நாலு பேரைப் பற்றி மட்டும் சொல்கிறேன். மீதிப்பேரை நாளைக்குச் சந்திக்கிழுப்போம்.

முதலில் சாக்ரடீஸ் : மனித இனத்தில் முதன் முதலில் ஒங்களோட CPU வை (அதாங்க ஒங்க மூளை) பயன்படுத்துன்னு சொன்ன ஞானி. யார் என்ன சொன்னாலும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசிச்சிப்பாத்து ஒரு முடிவுக்கு வா ன்னு மனித குலத்துக்குச் சொன்ன தீர்க்கதரிசி. அதற்கு முன்னும் இன்றும் கூட நான் சொல்வதைக் கேளுங்கள் நம்புங்கள் என்று நமது நம்பிக்கையை மூலதனமாக வைத்துத்தான் நமது அரசியல்வாதிகளோடவும் மதாச்சாரியார்களோட பொழப்பும் ஓடிக்கிட்டிருக்கு.இவர் ஒரு தத்துவ ஞானி(Philosopher).

இந்த மகா ஞானியின் சீடர் பிளேட்டோ என்ற அரசியல் அறிஞர். பிளேட்டோ தான் உலகுக்கு அரசியலமைப்புன்னா என்னன்னு சொன்னவர் (அவர் எழுதியதுதான் The Republic , The Symposium , Meno , Phaedo and Apology .Republic தான் இன்றும் மக்களாட்சியின் அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது. லிஸ்டில் இருக்கும் மற்ற புத்தகங்களைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

அடுத்தவர் பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில். இவரை நவீன தர்க்க சாஸ்திரத்தின் தந்தை (Father OF Modern Logic) என்பார்கள்..இன்று நாம் படித்துக் கொண்டிருக்கிற தர்க்க சாஸ்திரத்தின் அடிப்படைகளை வகுத்த ஞானி அவன்தான்.அவன் தர்க்க சாஸ்திரத்தில் மட்டும் மேதையில்லை. அவன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை பார்த்தாலே அது தெரியும் அவன் எழுதியதாகச் சொல்லப்படும் நூல்களின் எண்ணிக்கை 455. சில மட்டும் மாதிரிக்கு.The Nicomachean Ethics, Politics,Poetics,Physics, Metaphysics, Rhetorics, De Anima (on the Soul). எத்துனை துறைகள்…………….. நீதிநூல், அரசியல், கவிதைஇலக்கணம் , பொருளியல், தத்துவ விசாரம், மேடைப்பேச்சின் இலக்கணங்கள், மனோதத்துவம்.

இந்தப் பன்முக ஞானியின் (Multifaceted Personality) சீடன் மாசிடோனியாவின் இளவல் அலெக்சாண்டர். இவன் நடத்திய போர்கள் பல அவற்றில் 20 போர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அலெக்சாண்டர் அத்தனையிலும் வெற்றிக்கொடி நாட்டினான். முதல் போரில் அவன் மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டான். (Battle of the Granicus)

இந்த நால்வரில் முதல் மூவரும் கிரேக்கத்தின் அறிவின் மாதிரி காட்டினார்கள். அலெக்சாண்டர் வீரத்தின்நமூனாக் காட்டினான் இந்த உலகத்துக்கு. மற்றவர்கள் என்ன செய்தார் கள் அப்புறம் பார்க்கலாம்.

இவர்களையெல்லாம் எனக்கு நண்பர்களாகியது நம்ம ஊர் ஞானி திரு வெ. சாமிநாத சர்மா அவர்கள். பிளேட்டோவின் அரசியல் + கிரீஸ் வாழ்ந்த வரலாறு என்ற இரு நூல்களின் மூலம்.

Nirai Mathi

About The Author

Related posts