Thursday, January 18, 2018

.
Breaking News

நான்காவது முறையாக

நான்காவது முறையாக

நான்காவது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

கடந்த 2013-இல் காங்கிரசுக் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்து இந்நாட்டு உழவர் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தினைச் சிதைக்கவும், உள்நாட்டு உணவுப்பொருள் உற்பத்திக்கு முட்டுக்கட்டையிட்டு மக்கள் விரோதபோக்கைக் கடைபிடித்தது.

அப்போது இச்சட்டத்தை அதிமுக தலைமை எதிர்த்தது. திமுக தலைமை ஆதரித்தது. அதேநிலையில், 2014-இல் ஆட்சிபீடம் ஏறிய பாரதீய சனதா தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு, காங்கிரசு அரசு கொண்டுவந்த நிலம்கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தும் மீண்டும் அதை நாடாளுமன்ற ஒப்புதலுக்கு வைக்காமல் குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் அவசரச்சட்டமாகவே கொண்டுவந்து வேளாண்மையாளர்களின் உழைக்கும் உரிமையைத் தட்டிப்பறிக்கும் கொடுஞ்செயலில் இறங்கியது. எல்லாம் பறிக்கப்பட்டு நிலம் மட்டும் தான் விவசாயிடம் இருந்தது. அதையும் பறித்துவிட முழுமூச்சுடன் மோடி அரசு செயல்படுவது கண்டு கொந்தளித்த எதிர்ப்பாளர்களை மழுங்கடிக்கும் வகையிலே மீண்டும் அக்கட்டத்தை கடந்த மார்ச் 10இல் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு வைத்தபோது முன்னர் எதிர்த்த அதிமுகவின் தலைமை தங்களின் திருத்தக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறி ஏற்று ஆதரித்து வாக்களித்தது. இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறி போராட்டம் நடத்திய பாமக நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைதிக் காத்தது. ஆக தமிழகக் கட்சிகளான அதிமுக, திமுக, பாமக போன்ற கட்சிகள் இதில் உழவர்களின் நலன்களையும், உரிமைகளையும்விட தன் கட்சியின் இலாப நட்ட கணக்குகளையே முதன்படுத்தி ஆதரிப்பதும், எதிர்ப்பதுமான நாடகங்களுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக கடந்த 15ஆம் நாளில் தில்லியில் கூட்டப்பட்டக் முதல்வர் கூட்டத்தில் கலந்துகொள்ளாததுடன் இச்சட்டத்தை மீண்டும் எதிர்ப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு மடல் தீட்டியுள்ள நிகழ்வு அமைந்துள்ளது.

 

About The Author

Related posts