Thursday, January 18, 2018

.
Breaking News

எம்மோடே வாழுகின்றார் !

எம்மோடே வாழுகின்றார் !

மண்ணிலே உள்ளவர்கள்
> மனம்மகிழ இசையமைத்த
> மெல்லிசையின் மன்னனே
> விரைவாகப் போனதேனோ
>
> விண்ணிலே உள்ளவரும்
> மெல்லிசையைக் கேட்பதற்கு
> விரும்பியுனை அழைத்ததனால்
> விண்ணோக்கிச் சென்றனையோ
>
> கண்ணதாசன் வாலிபாடல்
> காலமெலாம் நினைப்பதற்கு
> உன்னுடைய இசையன்றோ
> உரமாக விளங்கியது
>
> ஏழ்மைதனில் இருந்தாலும்
> இன்னல்பல பட்டாலும்
> வாழ்வெல்லாம் இசையுண்டு
> மாயிசையைத் தந்துவிட்டாய்
>
> நோய்வந்து படுத்தாலும்
> நுடங்கிநாம் நின்றாலும்
> மன்னவனே உன்னிசையே
> மாமருந்தாய் இருந்ததன்றோ
>
> பாவரிசைப் படங்களிலே
> பலபாடல் எம்மனத்தை
> பதமாக்கி இதமாக்கி
> பக்குவத்தைக் ஊட்டியதே
>
> கவியரசர் பாட்டெழுத
> எம் எஸ்வி இசையமைக்க
> டி எம் எஸ் பாடிவிடின்
> தேவருமே வந்துநிற்பார்
>
> எத்தனையோ மெட்டுக்கள்
> எப்படித்தான் வந்தனவோ
> இன்றுவுன் ஆர்மோனியம்
> இயம்பிடுமா இரசியத்தை
>
> ஆர்மோனியம் இப்போ
> அநாதையாய் நிற்கிறது
> அதுவுன்னை நினைத்தபடி
> அழுதழுது நிற்கிறது
>
> விஸ்வநாதன் எனும்பெரியேன்
> விண்ணோக்கிச் சென்றசெய்தி
> மண்ணிலுள்ள இசைக்கெல்லாம்
> மாறாத இழப்பன்றோ
>
> இசைமன்னன் தனைப்பறித்த
> இரக்கமிலா அரக்கர்களே
> இசைமன்னன் இசையினைநாம்
> எப்பொழுதும் தரமாட்டோம்
>
> எம் எஸ்வி இசையிலேநாம்
> என்னாளும் இணைந்திருப்போம்
> எம் எஸ்வி இசையாக
> எம்மோடே வாழுகின்றார் !

( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா )

About The Author

Related posts