Friday, July 28, 2017

.
Breaking News

1000 ரூபா சம்பள விவகாரம்

1000 ரூபா சம்பள விவகாரம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000ரூபா சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதானிகளுடனான இரண்டாம் கட்டப் பேச்சவார்த்தை நாளை காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதானிகளுடன் கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதலாவது பேச்சுவார்த்தையின் போது கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் 22 கம்பனிகளின் பிரதானிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இருந்த போதிலும் அன்றைய தினமும் 1000 ரூபா சம்பள விவகாரம் தொடர்பில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இவ்வாறான நிலையில் அன்றைய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு 15ஆம் திகதியான நாளை புதன்கிழமை மீண்டும் கூடிப் பேசுவதென முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts