Tuesday, December 12, 2017

.
Breaking News

நாடு திரும்ப ஆயத்தமாகியுள்ளனர்!

நாடு திரும்ப ஆயத்தமாகியுள்ளனர்!

துனிசியாவிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட மற்றும் அங்கு நிரந்தரமாக வாழுகின்ற பிரித்தானியர்களில் ஒரு பகுதியாக ஆயிரம் பேர் முதற்கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) நாடு திரும்ப ஆயத்தமாகியுள்ளனர்.

அண்மைக்காலங்களில் துனிசியாவில் தொடர்ந்து இரு தடவைகள் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருக்கும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வருமாறு பிரித்தானிய அரசு அழைத்திருந்தது.

எதிர்காலத்திலும் துனிசியாவில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறுவதற்கான அச்சுறுத்தல் காணப்படுவதாலேயே பிரித்தானியா தம் நாட்டு மக்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துள்ளது.

மேலும் இறுதியாக துனிசியாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 38 பேரில் 30 பேர் பிரித்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

About The Author

Related posts