Tuesday, November 21, 2017

.
Breaking News

உமர் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

உமர் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

ரஷ்யாவில் நவாஸ் ஷெரீப்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சுவார்த்தை, எல்லை தொடர்பான நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் என்று ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது இரு நாட்டு தலைவர்கள் நடத்திய இப்பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கது. இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் கடந்த காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல தடைகள் இருந்தன. பேச்சுவார்த்தையில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் எதுவும் பேசவில்லை என்றாலும், எல்லைப் பிரச்சனை தொடர்பாக இவ்விவகாரம் கவனத்தில் கொள்ளப்படுவதாகவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மோடி-நவாஸ் ஷெரீப் இடையேயான சந்திப்பு துரதிஷ்டவசமானது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

About The Author

Related posts